ரத்தம் சொட்டும் பிக் பாஸ் புகழ் ரைசா வில்சன்
புரியாத புதிர் படம் வெளியாகி மூன்று வருடம் முடிந்த வெற்றியைக் கொண்டாடிய நடிகர் விஜய் சேதுபதி புது படத்தின் பெயர் மற்றும் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இவருடன் மேலும் நான்கு பிரபலங்கள் இப்படத்தின் பெயர் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

பிக் பாஸ் புகழ் ரைசா வில்சன் கதாநாயகியாக நடிக்கும் படம் ‘தி சேஸ்’. பிக் பாஸில் இவரை நினைவில்லாதவர்களுக்கு பியார் பிரேமா காதல் கதாநாயகியாக நினைவிருக்கும். தி சேஸ் படம் தமிழ் தெலுங்கு என இரு மொழியிலும் இயக்கப்பட்டுள்ளது. கார்த்திக் ராஜு இப்படத்தின் இயக்குனர்.

கார்த்திக் ராஜூ
தமிழ்த் திரையுலகில் ஆக்சன் காமெடி படமான திருடன் போலீஸ் மூலம் அறிமுகமானவர் கார்த்திக் ராஜூ. அதன்பிறகு சூர்ப்பனகை என்ற படத்தை இயக்க கொரோனாவால் படம் பிடிப்பு நிறுத்தப்பட சற்றுத் ஒரு தளர்வு வந்த பிறகு சிறு குழுவினருடன் திரையுலகம் செயல்படத் துவங்கியவுடன் கதை எழுதி இயக்கிய படம் இது. இப்படத்தைப் பற்றி இவ்வளவு நாள் சஸ்பென்ஸாக வைத்திருந்த இப்படத்தின் குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் தமிழில் நடிகர் விஜய் சேதுபதியால் வெளியிடப்பட்டது இப்படத்தின் பெயரும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும். எமோஷனல் த்ரில்லராக சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் பெயர் ‘தி சேஸ்’ ஆகும்.
தி சேஸ்
ரைசா வில்சன், ஹரிஷ் உத்தமான் முன்னணி நடிகர்களாக இப்படத்தில் நடிக்க பாலா சரவணன் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் தமிழ் மொழியில் துணை நடிகர்களாக நடிக்க, சத்யம் ராஜேஷ் மற்றும் மது நந்தன் ஆகியோர் தெலுங்கு மொழியில் அந்த துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தெலுங்கு திரையுலகத்தில் கதாநாயகியாக இருக்கும் அனசூயா, இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார். கைதி படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த பெண் குழந்தை இந்தப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை நடத்தப்பட்டுள்ளது. படம் பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பமாகி உள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
தி சேஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் உச்சகட்டத்தை தொடும் அளவிற்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் ஒரு மரத்தில் காலில் கயிற்றால் கட்டப்பட்டு தலைகீழாக தொங்கும் ரைசா வில்சனின் உடலிலிருந்து ரத்தம் சொட்டுகிறது. இவ்வாறு இருக்கும் போஸ்டர் எமோஷனல் திரில்லர் படம் என்பதற்கு ஏற்ப மக்களின் எதிர்பார்ப்பை தூண்டுகிறது.
விஜய் சேதுபதி, ரெஜினா கஸன்ட்ரா, நீல் நிதின் முகேஷ், ஜெயசூர்யா, பருள் யாதவ் என ஐந்து பிரபலங்கள் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி கன்னடம் என பல மொழிகளில் இப்படத்தின் பெயரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிட்டனர்.
தி சேஸ் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் பற்றிய தகவல்களும் வெளியிடும் கூடிய விரைவில் வரப்போகிறது மக்கள் அனைவரும் அப்டேட்ஸிற்காக காத்திருக்கவும்.