Today News: கனமழை காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு (14.11.23) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் கனமழையின் காரணமாக 8 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (14.11.2023) பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை முன்னிட்டு சனி ,ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து இருந்தனர் .அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடிய நிலையில் நவம்பர் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தது. தீபாவளி பண்டிகை முடிந்து புத்தாடை அணிந்து பள்ளி கல்லூரிகளுக்கு செல்லலாம் என்று ஆர்வத்துடன் மாணவர்கள் இருந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் 14ஆம் தேதி குறிப்பிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர்,திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம் ஆகிய ஏழு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
ஆகவே தமிழகத்தில் நவம்பர் 14ஆம் தேதி கனமழை செய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதால் மேல்குறிப்பிட்ட 8 மாவட்டங்களில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். விடுமுறை அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.