செய்திகள்தமிழகம்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு!

சென்னையில் மீண்டும் ஊரடங்கு அமல், ஜூன் 21-ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை சென்னையில் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கில் எந்தவித நடமாட்டமும் இன்றி அனைவரும் வீட்டில் இருக்குமாறு அரசு அறிவித்துள்ளது. சென்னையில் மீண்டும் ஊரடங்கு மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இருக்கும்.

தமிழக அரசு கொரோனா தொற்று தடுக்க அரசு இந்த முடிவை எடுத்துள்ளது பொதுமக்கள் கடுமையாக தமிழக அரசிடம் மருத்துவ பரிந்துரை குழுக்கள் அறிவித்துள்ளன. இதனை அடுத்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் இருக்கும்.

ஜூன் 19ஆம் தேதி இரவு முதல் ஊரடங்கு தொடங்குகின்றது என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னைவாசிகள் காய்கறி கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்கு ஆகியவை கொள்முதல் செய்ய காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே பயணிக்க வேண்டும். வெளியில் செல்லும் பொழுது நிச்சயம் சமூக இடைவெளி என்பது அவசியம். இந்த ஊரடங்கு நடவடிக்கை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படுகிறது.

சென்னையின் கண்காணிப்புக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருக்கும் திருவள்ளூர் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் மருத்துவமனைகள் மருத்துவ பரிசோதனை கூடங்கள் மருந்தகங்கள் ஆம்புலன்ஸ் அமரர் ஊர்தி ஆகிய பணிகள் மட்டும் நடைபெறும்.

வாடகை ஆட்டோ டாக்ஸி தனியார் வாகன உபயோகங்கள் முழுவதுமாக மூடப்படுகின்றது எந்த ஒரு அனுமதியும் இன்றி இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அவசரமான மருத்துவ தேவைகளுக்கு மட்டும் வாடகை டாக்ஸி ஆட்டோ அனுமதிக்கப்படும்.

மருத்துவமனைகள் வழக்கம்போல் செயல்படலாம் உணவகங்களில் காலை 6 முதல் மாலை இரவு 8 மணி வரை பார்சல் மட்டுமே வழங்கப்படும். சென்னையில் 12 நாட்கள் தொடர்ந்து இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் கடுமையான ஊரடங்கு எந்தவித தொடரும் என்று அரசுக்கு மருத்துவக்குழுக்கள் அறிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *