2023 Navaraathri 9 day special: நவராத்திரி 9 நாள் தேவியை வணங்கும் முறை,அதனால் என்ன பலன்,என்ன செய்ய வேண்டும்
இந்தியாவில் நவராத்திரி பண்டிகை ஒன்பது நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஒன்பது நாட்களும் நெய்வேத்தியம் படைக்கப்பட்டு தரிசனம் செய்யப்படுகின்றது. கோவில்கள் மற்றும் வீடுகள் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் பொது இடங்களிலும் கொண்டாடப்படுகின்றன. வரும் அக்டோபர் 15ஆம் தேதி நவராத்திரி கொண்டாட்டம் தொடங்குகின்றது அக்டோபர் 24ஆம் தேதி வரை விஜயதசமி முடியும் நாள் வரை இந்த கொண்டாட்டமான நடைபெறும்.நவராத்திரி பண்டிகையில் ஒவ்வொரு நாளும் வண்ண வண்ண நிறத்தில் உடைகள் மற்றும் உணவுகள் இனிப்பு பலகாரங்கள் ஆகியவை படைக்கப்பட்டு பராசக்தி வழிபாடு நடைபெறுகின்றது. ஒன்பது நாட்களுக்கு நாம் அணிய வேண்டிய முக்கிய நிறைவு உடைகள் ட்ரெண்டிங் இங்கு கொடுத்துள்ளோம்.
நவராத்திரி முதல் நாள்
நவராத்திரி முதல் நாள் அக்டோபர் 15 ஞாயிற்றுக்கிழமை தொடங்குகின்றது. இந்த நாளில் முதல் நாள் தூய்மையை மனதில் வைத்து அமைதி, ஒழுக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி சைலபுத்தரி தேவியை வணங்கும் நாள் . இந்நாளில் வெண்ணிற ஆடைகள் அணிவது வழக்கமாகும். நவராத்திரி முதல் நாளில் நாம் வழிபாடு நடத்தும் போது மனதில் ஏற்படும் தேவையற்ற குழப்பங்கள் , இடையூறுகள் நீங்கி மனம் பலம் பெறும் அமைதி கிடைக்கும்.
நவராத்திரி இரண்டாம் நாள்
நவராத்திரி இரண்டாம் நாள் அக்டோபர் 16 திங்கள்கிழமை நவராத்திரி இரண்டாம் நாள் கொண்டாடப்படுகின்றது. இரண்டாம் நாள் பிரம்ம சாரணி தேவியை வணங்கும் நாளாக நவராத்திரி விழா கொண்டாட்டம் அமைகின்றது .இரண்டாம் நாள் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நாளாகவும் இருக்கின்றது. அந்த நாளில் சிவப்பு நிற உடைகளை அணிவது பாரம்பரியமாக கருதப்படுகிறது. நாம் தொடங்கும் எந்த ஒரு செயலும் எந்த ஒரு இடையூறும் இன்றி வெற்றிகரமாக செய்து முடிக்க நமக்கு சக்தி கொடுக்கும் நாளாக இது அமையும். அம்மனுக்கு உகந்த நேரம் சிவப்பு நிறமாகும் அதனை நவராத்திரி இரண்டாம் நாள் அணிவிக்கின்றனர் .
அது சரி இந்த நாளில் ட்ரெண்டிங்கில் நமக்கு அனார்கலி மற்றும் பிளீட் பிராக் டைப், லாங் டாப்புகள் கிடைக்கின்றன. பட்டு மற்றும் கிரேப் ரகங்களில் நமக்கு உடைகள் கிடைக்கின்றன ஆண்களுக்கு பிராண்டுகளின் ஷர்ட் பெற்றுக் கொள்ளலாம். .சிலர் சர்வாணி டாப் அணிகின்றனர் தமிழ் விளக்கப்படி சிலர் வேஷ்டியும் அணிந்து கொண்டாடுகின்றனர்.
நவராத்திரி மூன்றாம் நாள்
நவராத்திரி மூன்றாம் நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகின்றது. சந்திக்காடா தேவியை வணங்கும் நாளாக இந்த நாள் பின்பற்றப்படுகிறது. தேவியின் அருள் பெற செவ்வாய்க்கிழமை அன்று அடர் நீல நிறத்தில் தேவிக்கு அலங்காரம் ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன. தெளிவு மற்றும் செழுமை அமைதியை வலியுறுத்த இந்த அடர் நீல நிறம் பின்பற்றப்படுகின்றது. ட்ரெண்டிங்கில் நமக்கு இந்த நிறத்தில் அழகிய சுடிதார் ஆகியவையும் கிடைக்கின்றன.
நவராத்திரி நான்காம் நாள்
நவராத்திரி நான்காம் நாள் அக்டோபர் 18 அன்று புதன்கிழமை புஷ்பாண்டா தேவி வழிபாடு நடத்தப்படுகின்றது. இந்த புதன்கிழமை அன்று அடர் மஞ்சள் நிறத்தில் தேவிக்கு புடவை சாத்தப்படுகின்றது. மங்களகரமான சகுனத்தை குறிக்கும் வகையில் மஞ்சள் நிறம் அனுமதிக்கப்படுகிறது. மகிழ்ச்சி, வலிமை ,ஆரோக்கியம், அதிர்ஷ்டம் பெறுவதற்கு மஞ்சள் நிறம் தேவையாக உள்ளது. கிருஷ்ணருக்கு பிடித்தது மஞ்சள் நிறம் தான்.
நவராத்திரி ஐந்தாம் நாள்
நவராத்திரி ஐந்தாம் நாள் வியாழக்கிழமை கொண்டாட்டத்தில் ஸ்கந்த மாதா தேவியை வணங்க பச்சை நிற ஆடை அணிவது வழக்கமாகக் கொண்டு உள்ளனர். செழிப்பு, இயற்கை, வளர்ச்சி ,அமைதியை பச்சை நிறம் பசுமையை குறிக்கும்.வாழ்வின் தொடக்கத்தை இந்த வலியுறுத்துகின்றது அம்பாளுக்கு பச்சை நிற பட்டு சாத்தி பூஜை செய்து வணங்குவது வழக்கமாக உள்ளது. வாழ்வில் நிம்மதி அதிகரிக்க இது உதவும்.
நவராத்திரி ஆறாம் நாள்
நவராத்திரி ஆறாம் நாள் கொண்டாட்டமானது வெள்ளிக்கிழமை அக்டோபர் 20ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது. வெள்ளிக்கிழமை அன்று சாம்பல் நிறத்தில் அம்மன் சண்டிகா தேவிக்கு பட்டு சார்த்தி வணங்கும் நாளாக உள்ளது. தைரியத்தை முடிவெடுக்கும் தன்மையையும், நியாயம், நீதியுடன் வாழவும், அச்சமற்ற எங்கும் இருக்கவும் சாம்பல் நிறம் நமக்கு உதவியாக இருக்கின்றது. நன்மைக்கு உறுதுணையாக இருக்கும் சாம்பல் நிறத்தை நாம் அணிந்து கொள்ளலாம்.
நவராத்திரி ஏழாம் நாள்
நவராத்திரி ஏழாம் நாள் நவ துர்க்கை வழிபாடு செய்யப்படுகின்றது. இந்நாளில் ஆரஞ்சு நிற உடைகள் அணிவது வழக்கமாகக் கொண்டுள்ளனர். எதையும் ஈர்க்கும் தன்மை, அன்பு உற்சாகமான செயல்பாடு ஆகியவற்றை ஆரஞ்சு நிறம் கொண்டுள்ளது.
நவராத்திரி எட்டாம் நாள்
நவராத்திரி எட்டாம் நாள் கொண்டாட்டத்தில் மகா கௌரி தேவியை வணங்கும் நாளாக அனுசரிக்கப்படுகிறது. பச்சை நிற ஆடைகள் அணியலாம் இது மயில் பச்சை நிறம் என்பதால் இந்நாளில் மகாகௌரி அருள் நமக்கு கிடைக்கப்பெறும். தேவிக்கு இந்நேரத்தில் பட்டு சார்த்தி வழிபாடு நடத்துவது வழக்கமாகும்.
நவராத்திரி ஒன்பதாம் நாள்
நவராத்திரி ஒன்பதாம் நாள் சித்தார்த்தி தேவியை வணங்கும் இந்நாளில் பிங்க் நிற ஆடைகளை அணிந்து வழங்குவார்கள். அன்பு நேசம் ஆகியவற்றை இது குறிக்கும். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியை வழிபாடு செய்வார்கள் மற்றும் மூன்று நாட்கள் துர்கா தேவியின் ஆட்சி காலம் என்றும் அழைக்கப்படுகின்றது. இது துர்கா தேவிக்கு வழிபாடு செய்யப்படுவதுடன் வீரம் துர்கா தேவிக்கு வழங்கப்படுவதாகவும் இந்த பூஜையின் சாரம்சங்கள் உள்ளன.
அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவிக்கு வழிபாடு நடத்தப்படுகின்றது. லட்சுமி செல்வத்தின் அதிபதி ஆவார் அவரது கடாட்சம் கிடைக்க வேண்டும் என்றும் அவருடைய ஆட்சி காலமாக இந்த மூன்று நாட்கள் இருக்கும் என்றும் அவரை வழிபாடு நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைசி மூன்று நாட்கள் கல்வி செல்வத்தின் தெய்வமான சரஸ்வதி தேவிக்கான வழிபாடு செய்யப்படுகின்றது குறிப்பிடத்தக்கதாகும். இந்நாளும் சரஸ்வதி தேவியை மூன்று நாட்கள் வழிபட்டு நமக்கான அருளினை பெறுவோம்.