செய்திகள்தேசியம்

நடப்பாண்டில் 2000 ரூபாய் அச்சிட வில்லை ரிசர்வ் வங்கி தகவல்

ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்கும் போது 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வருகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளன. கடந்த 2019-20 நிதியாண்டில் அச்சிடப்பட்ட 22 பில்லியன் கரன்சிகளில் பாதிக்கும் மேற்பட்டவை 500 ரூபாய் நோட்டுகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

2019-20 நிதியாண்டில் மொத்தமாக சுமார் 176.8 மில்லியன் 2000 ரூபாய் நோட்டுகளை அப்புறப்படுத்தியதாக சொல்லப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கி இதுவரை அச்சடித்து உள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள்.

2016-17 3.5 பில்லியன்

2017-18 151 மில்லியன்

2018-19 47 மில்லியன்

2019-20 0 என்று தெரிவித்துள்ளது.

2016-17 ஆம் நிதியாண்டில் மொத்த கரன்சி புழக்கத்தில் 5.2% இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம். 2019-20 நிதியாண்டில் வெறும் 22.6% குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் மேற்கொள்ளும் பரிவர்த்தனையை அடிப்படையாக வைத்தே கரன்சி நோட்டுகள் அச்சிடும் முடிவினை அரசு ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து செய்து வருகின்றது.

2000 ரூபாய் நோட்டுகளை விடுவதை நிறுத்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என நிதியமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கடந்த மார்ச் மாதம் மக்களவையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2000 நோட்டுகள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டதாக சமூகவலை தளங்களில் வதந்திகள் பரவினாலும், இதற்கு விளக்கம் கொடுத்து வந்த ரிசர்வ் வங்கி இப்போது அதனை தனது அறிக்கையின் மூலம் உறுதி செய்துள்ளன.

கரன்சி நோட்டுகள் அச்சிடும் ரிசர்வ் வங்கியின் அச்சகங்களில் 2019 இருபதாம் நிதியாண்டில் ஒரே ஒரு 2000 ரூபாய் நோட்டை கூட விடவில்லை என அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 2014 நவம்பரில் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

2019-20 நிதி ஆண்டில் புதிதாக ஒரே ஒரு 2000 ரூபாய் நோட்டு அச்சடிக்க படவில்லை என தெரிவித்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி ஆகிய ஆர்பிஐ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *