கட்டுப்பாடுகளுடன் 144 தடை உத்தரவு தொடர்கிறது
பொதுமக்கள் வெளியில் செல்லும் போது பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம். பொதுமக்கள் வீடுகளிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முக கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் அவசியம்.
தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து அரசுக்கு ஒத்துழைப்பு நல்கினால் தான் இந்த நோய்த் தொற்றை கட்டுப் படுத்த முடியும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் 30 வரையிலான புதிய தளர்வுகள் உடன் கூடிய பொது முடக்கம் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளன.
இதில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்திற்குள் பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கி உள்ளன. தமிழகத்தில் 144 தடை உத்தரவு தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 இன் கீழ் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைப்படி எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.