இந்தியாவில் 13.2 லட்சம் பேர் கொரோனா சிகிச்சை குணமடைகின்றனர்
இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா ஒரு பக்கம் இருக்க அதேபோல் இந்தியாவில் தற்போது 13 லட்சம் பேர் சிகிச்சையிலிருந்து குணமாகி வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். கொரோனா சிகிச்சையிலிருந்து மீண்டவர்கள் இந்தியாவில் மொத்தம் 13.2 லட்சம் பேர் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சேர்த்து 56 ஆயிரத்து 282 பேர் கொரோனா தொற்று உறுதியாகச் சிகிச்சையில் உள்ளனர். அவர்களுக்குச் சிகிச்சை தொடர்ந்து நடந்து வருகின்றது இந்த நிலையில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் 46 ஆயிரத்து 121 பேர் இவர்களில் இந்தியாவில் இறந்தவர்கள் எண்ணிக்கை நேற்று மட்டும் 904 பேர் ஆகமொத்தம் இந்தியாவில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 13 லட்சத்தைத் தாண்டி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதுவரை இந்தியாவில் இரண்டு கோடியே 21 லட்சத்து 49 ஆயிரத்து 351 பேர் கொரோனா பரிசோதனையும் எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இந்தக் கொரோனா குறைந்து வருகின்றது என்று தகவல்கள் கிடைக்கின்றன.
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் பலர் குணமாகி திரும்பியுள்ளனர் இறப்புவிகிதம் குறைவாக இருக்கின்றது. அதேபோல் அரோக்கிய உணவும் அவசியமான அடிப்படை உடற்பயிற்சியும் தேவையாக உள்ளது. பிராணமாமம் செய்துவருவதால் மூச்சு சம்மந்தமான சிக்கல் சளி, நோய்த்தாக்கம் என்பது குறைவாக இருக்கும்.
நாடு முழுவதும் கொரோனா வீரியம் குறைந்து வருகின்றது. அதற்கு முக்கிய காரணமாக மாறிவரும் சூழ்நிலை மாற்றம் மற்றும் செயலிழக்கும் கொரோனான் வேகம் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெறும் உணவுகளில் கவனம் செலுத்து சாப்பிடு வருவதால் நோய் அகலும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதனை மக்கள் பின்பற்றி வருகின்றன்ர் பெரும்பாலான மக்கள் ராகி மற்றும் பல தானியங்கள் கலந்த உணவுகளைச் சாப்பிட்டு வருகின்றனர். இதுவும் நோய்த் தொற்று தடுக்க காரணியாகும்.