பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
கடந்த மார்ச் 27 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடக்க இருந்தது. கொரோனா தொற்றினால் தேர்வை ரத்து செய்து பள்ளிகள் மூடப்பட்டன. இன்று வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. பள்ளிக்கு செல்ல முடியாததாலும், தேர்வுகள் எழுத படாததால், முந்தைய தேர்விற்கான மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை பாஸ் செய்வதற்கான முடிவை கல்வித்துறை அறிவித்தது.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. ஆகஸ்ட் 10 காலை 9.30 மணியிலிருந்து 10 மணிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 17ம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
காலாண்டு, அரையாண்டு தேர்வு பங்கேற்காமல் வகுப்புகளுக்கு சரியாக வராத மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளனர்.
காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் தேர்வு எழுதி இருந்தால் அது சராசரி மதிப்பெண்ணுடன் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகும் முடிவுகளை
www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in
போன்ற இணையத்தளங்களில் தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் விபரம் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த கைப்பேசி எண்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.