டெக்னாலஜி

ராயல் என்ஃபீல்டு 350-500 சிசி மோட்டார் பைக்விலை

ராயல் என்ஃபீல்டு 350-500 சிசி மோட்டார் சைக்கிளின் விலை உயரவுள்ளது. 

ராயல் என்பீல்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள போதும்  டீலர் மற்றும் ரீடைலர்கள் இந்த விலை உயர்வை இந்த மாதம் முதல் அப்டேட் செய்வார்கள் என  தகவல்கள் தெரிவிக்கின்றன. 

புல்லட் மற்றும் 500 கிளாசிக் 350 மற்றும் 500 அத்துடன் ஹிமாலயன் மாடலை பாதிக்கச் செய்யும், காண்டினெண்டல் ஜிடி 650 இன்டர் செப்டர் 650 பைக்குளின் விலைகள் உயர்வு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை உயர்வை தொடர்ந்து புல்லட் 350 பைக்குகளின் விலை 1.34 லட்ச ரூபாய் முதல் தொடங்குகிறது. கிளாசிக் 350 எடிசன்களின் விலையில் ரூபாய் 1500 அதிகமாகி 1.63 லட்ச ரூபாயாக இருக்கும். 

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஏபிஎஸ் பைக்குகள் தற்போது 1.80 லட்ச ரூபாயாக இருக்கின்றது. காண்டினேட்டல் ஜிடி 650களின் விலை 2.64 லட்ச ரூபாயாகும். தயாரிப்பு செலவு காரணமாக தயாரிப்புச் செலவு இந்த விலை உயர்வுக்கு  காரணங்களாகும். புல்லட் 350 ரகங்களில் பாதுகாப்பு வசதிகளுடன் அறிமுகம் செய்ய சோதனை செய்யப்ப்பட்டுள்ளது. ஸ்க்ரம்பளர் -ஸ்டைல் வெர்சனாகவும், ரெட்ரோ பைக் போன்று இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *