திருச்சி கிழக்கு தொகுதியில் tvk சார்பில் ராகவா லாரன்ஸ்- cm விஜய் போடும் master plan
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கில் ராஜினாமா செய்தார். இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தவெக சார்பில் யார் வேட்பாளராக போட்டியிட போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் அதிகம் உள்ளது,நடிகர் ராகவா லாரன்ஸை களமிறக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
சமூக ஆர்வலர் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் ஆவார்,இவர் நடன கலைஞர், இயக்குநர், நடிகர் என தமிழ் மற்றும் தெலுங்கில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
சினிமாவை தாண்டி ஏழை எளிய மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு சொந்த செலவில் மருத்துவம் மற்றும் கல்வி ஆகியவற்றுக்கு உதவி வருவதன் மூலம் மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிறார்
ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, ஒரு மக்கள் சேவகராகவும், நேர்மையான நல்ல மனம் படைத்த மனிதராகவுமே அவர் மக்களின் மனங்களில் அதிக அளவில் பதிந்துள்ளார்,
விஜய்யுடன் தான் இருக்கும் புகைப்படத்துடன் அவர் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற பதிவை வெளியிட்டு, தவெகவிற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்,
தவெக தொண்டர்கள் லாரான்சிற்கு உற்சாக வரவேற்பு
நடிகர் ராகவா லாரன்ஸ் பிரபல நடிகர் மட்டுமின்றி சமூக ஆர்வலரும் கூட, இவர் ஏழை எளிய மக்களுக்கும், குறிப்பாக மாற்று திறனாளிகளுக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுப்பதும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் ஒவ்வொரு செயலும் இருக்கும்
இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸை களமிறக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
அரசியலுக்கு வர அறிவுரை கூறும் குருநாதார்
முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தனது அரசியல் என்ட்ரி குறித்து, தனது குருநாதரான ரஜினிகாந்திடம் ராகவா லாரன்ஸ் அறிவுரை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதைப் பொறுத்து அவரது முடிவு அமையும் என கூறப்படுகிறது
தவெகவின் எதிர்பார்ப்பு
லஞ்ச ஊழல் அற்ற, போதை பொருள் இல்லாத ஒரு நேர்மையான ஆட்சியை வழங்குவதே தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு என்று முதலமைச்சர் விஜய் கூறி வருகிறார்.மக்களுக்கு நன்கு பரிட்சையமான ராகவா லாரன்ஸை அரசியலுக்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்பதுடன், வெற்றியும் எளிதாகும் என்பது விஜய்யின் கணக்காக இருக்கும் என்று கூறப்படுகிறது.மக்கள் அவருக்கு வாக்களிப்பதில் எந்த தயக்கமும் இருக்காது என்பதும் விஜய்யின் மாஸ்டர் பிளானாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

