electionJallikattu bullsNEWஅன்பும் உறவும்சினிமாதேசியம்விழிப்புணர்வு

விஜய்க்கு ஆதரவு தெரிவித்து கொந்தளிக்கும் நடிகர்கள் பட்டாளம் – தயவு செஞ்சு பார்க்காதீங்க

ஜனநாயகன் படத்திற்கு அனுமதி கிடைக்குமா கிடைக்காத என்று படக்குழு காத்திருக்கும் நிலையில் ரிலீசுக்கு முன்பே படத்தின் முழு நீள காட்சிகளும் இணையத்தில் கசிந்தது பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் விஜய் ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதற்கு கண்டனம் தெரிவுத்தும், எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்

ஜனநாயகன் திரைப்படம் hd பிரிண்ட்டுடன் வெளியாகி அதிர்ச்சி

தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது தொடர்பாக திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி ஊரில் லோக்கல் சேனல் ஒன்றில் ஜனநாயகன் பட படமானது சட்டவிரோதத்திற்கு எதிராக வெளியிடப்பட்டு,போலீசாரால் அந்த சேனல் உரிமையாளரான பழனிச்சாமி என்பவரும் கைது செய்யப்பட்ட அத்தோடு அந்த லோக்கல் சேனலிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களை ஈடுபடுபவர்கள் போலீசார் தேடிக் கொண்டு வருகிறார்கள்

மேலும் இதுகுறித்து பேசும்போது நடிகர் தம்பி ராமையா இணையத்தில் கசிந்துள்ள படத்தை விஜய்யின் ரசிகர்கள் பார்க்காமல் தவிர்த்து வருகின்றனர். அதை பார்த்தால் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் அனைவரும் மனவேதனை அடைவார்கள் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். அவர்களின் பாதம் தொட்டு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் தான் சினிமாவை காப்பாற்றுகிறார்கள்” என்று கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *