வாங்க பழகலாம் இது என்ன ஆடிட்டியூட்
ஆடிட்டியூட் என்ற சொல் பலருக்கும் இன்று பந்தாவாகவே இருக்கின்றது. ஆடிட்யூட் என்பது ஒருவருடைய அனுகுமுறையை குறிக்கும். ஒவ்வொருவரிடமும் பழகுதன்மையை குறிக்கும். நல்ல ஆடிட்டியூட் மற்றும் கெட்ட ஆடிட்யூட் என்கிறோம்.
அறிவான அணுகுமுறையுடன் செயல்படுவது என்பது ஞானத்தை ஒத்தது அல்ல ஞானத்திற்கு அறிவிற்கும் வேறுபாடுகள் பல இருக்கின்றது. ஒருவர் நல்லவர் என்பதை அனைவரிடமும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அவருடைய நற்குணம் அனைவரிடமும் காட்டுவது தான் ஞானம் என்கின்றோம்.
எல்லோரிடமும் நல்ல பண்பை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் தவறானவர் வஞ்சகம் நிறைந்தவர் பேராசைக்கார பொறாமைக்காரர், கோல் மூட்டுபவர் மற்றும் சிக்கல்களை உண்டாக்குபவர் என்றால் அவரிடம் நமது அணுகுமுறையை அவருக்கு ஏற்றார் போல் மாற்றிக் கொள்ள வேண்டும்.
அவரிடமும் நாம் நல்லவராக இருந்தால் அதிக அளவில் பயன்படுத்தப்படுபவராக இருப்போம். நல்லவருக்கு நல்லவராக இருக்கலாம் என்பது சிறப்பானது ஆகும். ஆனால் அனைவருக்கும் நல்லவராக இருக்கிறேன் என்று முட்டாளாக விட வேண்டாம். அனைவரிடமும் அன்பு காட்டலாம் ஆனால் அந்த அன்பை வைத்து ஒருவர் நம்மை பயன்படுத்திக் கொள்கிறார் எனில் அவரிடம் இருந்து விலகிச் செல்வது நலம் தரும்.
நம்மிடம் பேசுபவர்கள் பழகுபவர்கள் அனைவரும் நமக்கு ஒத்தவர்கள் அல்ல அதேபோல பழிவாங்கும் குணமும் நமக்கு உகந்ததல்ல. ஒரு சில ஆண்கள் செய்யும் தவறுகளால் நாம் ஒட்டுமொத்த ஆண் வர்க்கத்தையும் குறை கூற முடியாது. அதே போல பெண்கள் செய்யும் தவறுக்கும் பெண்களை நாம் பொதுவாக குறை கூற முடியாது.
அணுகுமுறையை வைத்து நாம் ஒருவரிடம் பழகுவதை நிர்ணயிக்க வேண்டும் வாங்க பழகலாம் என்று வருவதற்கு எல்லாம் நல்லவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை இதைத்தான் ஆட்டிட்யூட் என்கின்றனர் சரியான ஆட்டிடியூட் இருந்தால் நம்மைச் சுற்றியுள்ள இந்த சமூகத்தை எளிதாக சமாளித்து வாழ்வை வெற்றியுடன் கொண்டு செல்லலாம் என்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்