NEWசினிமாசின்னத்திரை

மனோஜிற்கு டைவர்ஸ் கொடுக்க தயாராகும் ரோகினி – ஸ்ருதி ரவியை பிரிக்க சதி தீட்டும் நீத்து

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மனோஜ் ரோகினி சந்தித்து பணம் கொடுக்க செல்கிறார் நான் ரோகிணி ஒரு முக்கியமான முடிவு எடுத்து இருப்பதாகவும் அந்த முடிவு உன் கையில் தான் இருக்கிறது என்றும் ஒரு பெரிய ட்விஸ்ட்டை வைக்கிறார் அடுத்து நீ தூங்கு ரவையை சுருதியிடமிருந்து பிரிப்பதற்கு, ஸ்ருதியின் எதிரியுடன் கை கோர்க்கிறார்

credits -google

ரோகிணியின் மாஸ்டர் பிளான்

மனோஜ் ரோகினிக்கு இந்த மாதம் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுப்பதற்காக ரோகினியை தேடி வீட்டிற்கு செல்கிறான், ரோகினியோ வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் அழைத்து சாப்பிட வைக்க முயற்சிக்கிறாள், மனோஜ் மருத்துவம் ரோகிணி வலுக்கட்டாயமாக சாப்பிட வைக்கிறார் அப்பொழுது ரோகினி நம் வாழ்க்கைக்காக ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளேன், நான் செய்த தவறு எல்லாமே உன்னை காதலிப்பதற்காகவும் உன்னை திருமணம் செய்வதற்காக மட்டுமே சொன்னேன் உனக்கு ஆபத்து வரும்போது எல்லாமே நான் தான் உதவி செய்திருக்கிறேன், என்னால் உன்னை விவாகரத்து செய்ய முடியாது இனிமேல் நாம் நம்முடைய வாழ்க்கையை பார்ப்போம் நீ உன் அம்மாவை விட்டு வெளியே வந்து என்னுடன் நீ தங்க வேண்டும் என்று ரோகினி மனோஜிடம் கூறிக் கொண்டிருக்கிறாள்

ரோகினிக்கு மனோஜ் போடும் டீல்

இதற்கெல்லாம் எங்க அம்மா சம்மதிக்கவே மாட்டாங்க, இனி நம்ம நாளா சேர்ந்து வாழ முடியாது , எனக்கு டிவோஸ் கொடுத்து விடு என்று மனோஜ் சொல்லிக் கொண்டிருக்கிறார், ரோகினியோ உனக்காக நான் எவ்வளவு செய்து இருக்கிறேன் எப்ப கூட போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே எடுப்பதற்காக நான்தான் அஞ்சு லட்சம் கொடுத்து அந்த பணத்திற்கும் இப்போ வரைக்கும் வட்டியும் கட்டிக் கொண்டிருக்கிறேன், ஆனால் நீ என்னை உங்க அம்மா எல்லார் முன்னாடியும் கேவலமா பேசுறத பார்த்துகிட்டு இருக்கிறாய், என்னதான் இப்போ சண்டை போட்டுக்கிட்டு இருந்தாலும் ரெண்டு வருஷமா நான் தான் உனக்கு வைஃபா இருந்தேன் அப்போ எந்த அளவுக்கு லவ் பண்ணி இருப்போம் அதெல்லாம் நீ எதையுமே நினைச்சு கூட பார்க்கலையே, உங்க அம்மாவை கேள்வியும் கேக்கல

நான் டிவோர்ஸ் கொடுக்க தயார்

மனோஜ் இந்த முறை உறுதியாக நீ செய்த எதையுமே என்னால் மறக்கவும் முடியாது நீ பொய் சொன்னதையே என்னால் மறக்கவும் முடியாது இனி நாம் சேர்ந்து வாழ்வதற்கு எங்க அம்மா விட மாட்டாங்கனு மனோஜ் உறுதியா சொல்லிக் கொண்டிருக்கிறார்

பதிலுக்கு நீ டிவோர்ஸ் தான் வேணும் அப்படின்னு ஆசைப்படுகிறாய் நான் கொடுத்துவிடுகிறேன் ஆனால் நான் கொடுத்த அஞ்சு லட்சம் நீ எனக்கு திருப்பி கொடுத்து விட்டால் உனக்கு டிவோர்ஸ் கொடுத்து விடுகிறேன் என ரோகிணி கூறிவிட்டாள், மனோஜ் மனோஜ் அந்த ஐந்து லட்சத்தை எப்படி கொடுப்பது என்று முளைத்துக் கொண்டிருக்கிறான் ஆனால் ரோகிணி விவாகரத்து கொடுக்கிறேன் என்று சொல்வதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருப்பதாக தெரிகிறது என்ன நடக்குது என்று பார்க்கலாம்

credits -google

ஸ்ருதியின் எதிரி இப்பொழுது நீத்துவின் நண்பண்

அடுத்து ஸ்ருதியையும் ரவியையும் பிரிப்பதற்காக நீத்து புதிய சதியை தீட்டிக் கொண்டிருக்கிறாள், ரவி திருமணம் செய்வதற்கு முன்பு சுருதிக்கு அம்மா அப்பாவும் பார்த்து வைத்த நபர் இருக்கிறார், அவரை ஏமாற்றிவிட்டு கடைசி நேரத்தில் சுருதி ரவையை திருமணம் செய்து கொண்டார் இதனால் ஸ்ருதியின் மேல் கடும் கோபத்தில் அவர் ஸ்ருதியை பலமுறை கொள்வதற்கும் முயற்சி செய்துள்ளார், இதை தெரிந்த நீத்து இன்று அவருடன் பேசி ஸ்ருதி ரவியை பிரிக்க பக்கவாக பிளான் போட்டு கொண்டிருக்கிறார்

எனக்கு ரவி வேண்டும் நீத்துவின் ஆசை

ஸ்ருதி இப்போது தனியாக ரெஸ்டாரண்ட் வைத்து நடத்துகிறாள் அதனால் தான் திமிரில் ஆடுகிறாள் முதலில் அவளின் confidence உடைக்கணும், அதற்கு அந்த ரெஸ்டாரண்ட் மூட வைக்கணும், அதுக்கு அப்பறம் ஸ்ருதியை மெல்ல மெல்ல ரவியிடம் இருந்து சுலபமாக பிரித்துவிடலாம், நான் ரவியை திருமணம் செய்து கொள்கிறேன் நீங்கள் ஸ்ருதியை திருமணம் செய்தாலும் சரி, பழிவாங்கினாலும் சரி என்று பேசிகொண்டிருக்கிறார்கள் இனி அடுத்து ரோஹிணிக்கு மனோஜ் என்ன பதில் சொல்ல போகிறார் அடுத்து ஸ்ருதி ரவிக்கு வரப்போகும் ஆபத்து என்னவென்று பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *