Jallikattu bullsNEWசினிமாசினிமா பாடல்கள்

நான் கேசரி செய்தால் மட்டும், ’ஏன் காரமாக இல்லை’ என்கிறீர்கள்- நான் என்னதான் செய்யட்டும் விக்கியின் பதிலடி

பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, LIK படத்தின் நன்றி அறிவிப்பு விழா நடந்த நிலையில், அதில் பேசிய விக்னேஷ் சிவன் அவருடைய ஆதங்கத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்தியுள்ளார் மற்றும் நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் இணையதளத்தில் சட்டவிரோதமாக லீக் ஆனதைப் பற்றி கூறியுள்ளார் என்ன கூறினார் என்று பார்ப்போமா

பிரதீப் ரங்கநாதன் தான் மெயின்

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அனைத்து படங்களும் ஒரு பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,இந்தப் படத்தை நான் எடுக்க முதல் காரணம் பிரதீப். அவர் இல்லை என்றால் இந்தப் படம் நடந்திருக்காது. அவர் தான் இந்த படத்தில் மெயின்,இந்தப் படத்திற்கு பட்ஜெட்தான் பெரிய பிரச்னை என்றும் கூறியுள்ளார், இந்த நேரத்தில், என் நண்பன் ஹெச் வினோத்துக்கு வருத்தத்தை தெரிவிக்கிறேன். இது மரணம் அளவுக்கு வலிக்கக்கூடிய விஷயம்.

sorce credit- Google

இயக்குனர் H. வினோத்திற்கு எவ்வளவு வலிக்கும்

ஜனநாயகன் எவ்வளவு பெரிய பட்ஜெட் திரைப்படம் மேலும் ஒவ்வொரு காட்சியையும் எவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கிறார்கள் என்பதையும் எவ்வளவு கனவுகளுடன் எடுப்பார்கள் என்பதையும் ஓர் இயக்குநராக என்னால் உணர முடியும் என வருத்தத்தை தெரிவித்திருக்கிறார்

source credit – google

விமர்சனம் செய்பவர்களுக்கு நகைச்சுவையாக பதிலடி

சிம்பிளா செய்தால் ’ஒரே மாதிரி செய்கிறேன்’ என்கிறீர்கள். புதுசா செய்தால், அதில் குறை சொல்கிறீர்கள். நான் கேசரி செய்தால் மட்டும், ’ஏன் காரமாக இல்லை’ என்கிறீர்கள். என் சிக்கன் குழம்பு மட்டும் ’ஏன் இனிப்பாக இல்லை’ என்கிறீர்கள். இந்தப் படத்துக்குள் சில விஷயங்கள் இருக்கின்றன. அதுதான் எனக்கு வரும். எனக்கு பயங்கரமான படம் எல்லாம் வராது. அதை ஜாலியா பார்த்து ரசியுங்கள்” என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *