பிறந்தநாள் வாழ்த்துக்கள் யுவன் சங்கர் ராஜா
யாருடனும் ஒப்பிடாமல் தனக்கே உரிய பாணியில் தனி ரகமாய் நிற்கிறார் நம் யுவன் ஷங்கர் ராஜா. இன்று பலரது பிளேலிஸ்டில் அநேகமான பாடல்கள் இவருடையதே நிரம்பியிருக்கும். நம்முடைய பல சூழ்நிலைகளில் இவருடைய இசை மட்டுமே நமக்கு ஆறுதலாக இருந்திருக்கும்.
யுவன் சங்கர் ராஜா குரல் மற்றும் நா முத்துக்குமாரின் வரிகள் நம்மில் பல பேருடைய தனிமையான நேரங்களை கடக்க உதவியிருக்கும். இளையராஜாவின் இளைய மகனான யுவன்சங்கர் ராஜா 1996இல் அரவிந்தன் என்ற படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கினார்.
அதன்பின் இருபதுகளில் அனேகமான மக்களை தன்வசம் ஈர்த்தார்.
தீனா, துள்ளுவதோ இளமை, நந்தா, மௌனம் பேசியதே, ஏப்ரல் மாதத்தில், என ஒவ்வொரு படத்திலும் புதிதுபுதிதாக இசை அமைத்து நமது உள்ளத்தை தொட்டார்.
சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை இந்தப் படத்திற்காக பெற்றார். இதனை அடுத்து ஜீவா நடிப்பில் வெளிவந்த ராம் படத்திற்காக இசை அமைத்தார் இந்த படத்தில் வரும் “ஆராரிராரோ நான் இங்கு பாட” என்ற பாடல் இன்றும் நம் அனைவரையும் ஆளுகிறது என்றால் அது மிகையல்ல.
இந்தப்படம் சைப்ரஸ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் விழாவில் தி பெஸ்ட் மியூசிக்கல் ஸ்கோர் பிச்சர் விருதைப் பெற்றது.
இப்படி நீண்டு கொண்டே சென்றது அவருடைய இசை பயணம் சமீபத்தில் வெளியான பியார் பிரேமா காதல் மாரி 2, நேர்கொண்ட பார்வை போன்றவை இவருடைய இசையிலேயே வெளிவந்தன.
மேலும் தற்போது தல அஜித் குமார் நடிப்பில் வலிமை மற்றும் சிம்பு நடிப்பில் மாநாடு போன்ற படங்களுக்கு இசை அமைக்கிறார்.
தமிழ் சினிமாவில் ரீ மிக்ஸ் என்ற ஒரு சகாப்தத்தை உருவாக்கியவர் நம் யுவன் சங்கர் ராஜா குறும்பு படத்தில் ஆசை நூறு வகை என்ற பாடலை தமிழ் சினிமாவில் முதல் ரீமிக்ஸ் பாடல் ஆகும். மேலும் தற்போதைய பாடல்களின் நடுவில் பழைய பாடல்களை இணைத்து ஒரு புது ரகத்தையும் அறிமுகப்படுத்தினார்.
by srimathi