யம்மி சாக்லேட் மார்குயுஸ்
வீட்டில் இருக்கும் போது குழந்தைகளுக்கு கடையில் வாங்கிக் கொடுப்பதை விட வீட்டிலேயே செய்து கொடுக்கும் போது அதன் சந்தோஷமே தனி தான். அடிக்கடி சாக்லேட்டை விரும்பும் குழந்தைகளுக்கு சாக்லேட் மார்குயுஸை வீட்டில் செய்து கொடுக்கலாம். சாக்லேட் பிரியர்களுக்கு இந்த சாக்லேட் மார்குயுஸ் மிகவும் பிடிக்கும்.
சாக்லேட் மார்குயுஸ்
தேவையான பொருட்கள்
பிரஷ் க்ரீம் 100, டார்க் சாக்லெட் ஒரு கப், பெர்ரி அரை கப், க்ரீம் ஒரு கப், கொக்கோ பவுடர் 50 கிராம், முட்டை 5, சர்க்கரை 150 கிராம், டார்க் சாக்லெட் அரை கிலோ.
செய்முறை விளக்கம்
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, சர்க்கரையை சேர்த்து ஒன்றாக கலந்து நன்கு அடித்து வைக்கவும். கோகோ பவுடர் மற்றும் உருக்கிய சாக்லேட் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து விடவும்.
இதில் க்ரீம் மற்றும் காபி சாக்லேட் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை ஒரு மோல்டில் ஊற்றி இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைத்து விடவும். சாக்லேட் மற்றும் கிரீம் கொண்டு சாக்லெட் ட்ரஃபில் தயார் செய்யவும்.
மோல்டில் இருப்பதை அகற்றி விட்டு அதன் மேல் தயார் செய்து வைத்த சாக்லேட் ட்ரஃபிலை ஊற்றவும். இதன் மேல் ராஸ்பெர்ரி மற்றும் பிளேட்டிங் வைத்து அலங்கரித்து விடவும். பிறகு பரிமாறலாம். யம்மியான சாக்லேட் மார்க்குயுஸ் ரெடி.