சப்பாத்தியில் சில்லியா! புது ரெசிபி செஞ்சு அசத்துங்க
எல்லாருக்கும் ஏதாவது ஒரு கவலை என்றால் வீட்ல சமைக்கிற பெண்களுக்கு சமைக்கிறதை விட பெரிய கஷ்டம் என்ன சமைக்கிறது புதுசா என்ன செய்யறது அப்படிங்கிற டென்ஷன் தான் ரொம்ப பெருசா இருக்கும் . இனி அந்த கவலை வேண்டாம் சாதாரண சப்பாத்திய ருசியான சில்லி சப்பாத்தியா மாற்ற ஒரு டிப்ஸ்…
சப்பாத்தி சில்லி செய்முறை
முதலில் நீங்கள் எப்பொழுதும் செய்வது போல் சப்பாத்தியை செய்து எடுத்துக் கொண்டு அதை உங்களுக்கு பிடித்தமான வடிவில் அதாவது முக்கோணம் டைமண்ட் சதுரம் போன்ற வடிவில் கட் செய்து எடுத்துக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிதளவு மிளகாய் பொடி உப்பு சேர்த்து நீங்கள் ஏற்கனவே கட் செய்த சப்பாத்தியை அதில் போட்டு சிறிது நேரம் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும்.பின்பு அதனுடன் 5 பச்சை மிளகாய் , நறுக்கிய தக்காளி , கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும் தக்காளி வதங்கியவுடன் அதில் தேவையான அளவு உப்பு ,மஞ்சள் தூள், ,மிளகாய் தூள், மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
இதனுடன் உங்களுக்கு முட்டை சேர்க்க விருப்பம் இருந்தால் மாசாலாவுடன் 2 அல்லது 3 முட்டை சேர்த்துக் கொள்ளலாம்.பின்பு அதில் நீங்கள் ஏற்கனவே வறுத்து வைத்த சப்பாத்தி துண்டுகளை போட்டு சிறிது நேரம் நன்றாக வதக்கி கடைசியாக கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்..
sசுவையான சில்லி சப்பாத்தி ரெடி…