அன்றாட உணவுகளில் வைட்டமின் சி சேர்த்துக் கொள்ளாவிடில் இந்த அறிகுறிகள் ஏற்படும்
நீங்கள் எடை அதிகரித்து இருக்கிறீர்களா? வைட்டமின்-சி கொழுப்பு செல்களில் இருந்து வரும் கொழுப்பை வழி நடத்துகின்றது. உங்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க வைட்டமின் சி உதவுகிறது. இந்த வைட்டமின் குறையும் போது உடல் எடையை பராமரிப்பது சிரமத்தை சந்திக்க நேரும்.
திடமான எலும்பு
மேலும் திடமான எலும்புகளை ஒருங்கிணைக்க வைட்டமின் டி உதவுகிறது. எந்த ஒரு பற்றாக்குறையும் எலும்புகளில் பிரச்சனையை தூண்டும். எலும்புகள் சக்தி இழப்பதற்கு வைட்டமின்-சி சத்து குறைபாடே ஆகும். எலும்பு உடைவதற்கான அபாயம் அதிகரிப்பது இந்த குறையால் தான்.
வைட்டமின்-சி சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் வாய் நுண் கிருமிகளை எதிர்த்து ஈறு பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். முடி பிரச்சனை, முடி கொட்டும் பிரச்சனையை தீர்க்கும். முடி வறட்சியை உண்டாக்குவதோடு முடியின் முனைகளில் வெடிப்புகளையும் உண்டாக்குகிறது. வழுக்கை விழுவதற்கு வைட்டமின்-சி சத்து குறைபாடே ஆகும்.
இரத்தக்கசிவு
மேலும் மூக்கில் ரத்தம் கசிவு ஏற்படுதல். ரத்த நாளங்களை வலுப்படுத்த போதுமான வைட்டமின் சி இல்லாததால் இரத்தக்கசிவு ஏற்படுவது. ஸ்கருவியின் பொதுவான வெளிப்பாடாக உள்ளது. சருமத்தில் திடீரென்று வறட்சி அதிகரித்து சிவந்தும், கடினமாகவும் இருப்பதை உணர்ந்தீர்கள் என்றால் உங்களுக்கு வைட்டமின் சி தேவைப்படலாம்.
வைட்டமின் சி குறைபாடு
வைட்டமின் சி குறைபாடு கெரடோசிஸ் பிலாரிஸை தூண்டக் கூடும். இந்த பிரச்சனை இளைஞர்களிடையே காணப்படுவது இயல்பான ஒன்று. ஒவ்வொரு வயதிலும் இது நிகழலாம். தொடைகள், மேல் கைகள் போன்ற இடங்களில் விரும்பத்தகாத திட்டுக்கள் காணப்படும். இது எந்த ஒரு வேதனையையும் தராது. இருப்பினும் இந்த திட்டுகள் ஒருவித சங்கடத்தை ஏற்படுத்தும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் க்ரீம்களை உபயோகப்படுத்துகின்றனர்.
ரத்த நாளங்களை பலவீனப்படுத்தும் வைட்டமின் சி பற்றாக்குறையினால் அடிக்கடி சிராய்ப்புகள் ஏற்பட காரணமாகின்றன. வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் காயங்கள் அல்லது அறுவை சிகிச்சை காயங்கள் சீக்கிரம் குணமாகாமல் இருப்பதற்கு போதுமான வைட்டமின் சி இல்லாதது காரணமாகின்றன.
வைட்டமின் சி எடுத்துக் கொள்வதால் இணைப்பு திசுக்களை பலப்படுத்தும், சரி செய்யவும் உதவுகின்றன. மூட்டு வலி, மூட்டில் வீக்கம், மூட்டு அலர்ஜி போன்ற பிரச்சனைகளும் வைட்டமின்-சி குறைபாடுகளால் தான் ஏற்படுகின்றன. வைட்டமின் சி எடுத்துக் கொள்வதால் வெள்ளை அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கின்றன.
வைட்டமின் சி எடுத்துக் கொள்வதால் மனநிலையில் ஒரு மாற்றம்
உடலுக்கு வெறுப்பை உண்டாக்க கூடியவை என்பதால் காய்ச்சல் சளி அல்லது தொண்டை கரகரப்பு போன்றவை திடீரென்று ஏற்பட்டால் உடலுக்கு வைட்டமின் டி தேவைப்படுகிறது என்று அர்த்தம். வைட்டமின் சி குறைவாக இருந்தால் ஒருவரது மனநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆய்வு ஒன்றில் மனக் கவலையால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வைட்டமின் சி எடுத்துக் கொள்வதால் பிறகு அவர்களது மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளன.
நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வைட்டமின் சி மிகவும் அவசியமாகிறது. உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் சி ஆய்வுகளின்படி அமெரிக்க மக்கள் பலருக்கு வைட்டமின்-சி குறைபாடு இருப்பதாகக் கூறுகின்றது. இந்த வைட்டமின் குறைபாடு பல தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்குகிறது என்பதை பதிவிடுகிறேன்.