உங்களை எப்பொழுதும் அழகாக வைத்துக் கொள்ள வேண்டுமா?
பொதுவாக பெண்களுக்கு பூப்பெய்திய காலம். பிறகு கல்வி பருவம் முடிந்து திருமணம், குழந்தை பிறப்பு என்று அடுத்தடுத்து ஒரு காலகட்டத்தில் எடை போடுவதில் துவங்கி எல்லாவற்றுக்கும் எளிய தீர்வு வைத்திருக்கின்றனர்.
பொதுவாக பருமனை குறைபதற்கு இஞ்சி சாறு எடுத்து நான்கு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து எலுமிச்சை, வெள்ளரி மற்றும் புதினா சாறு கலந்து இரவில் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் இருந்து இந்த நீரை அவ்வப்போது பருகி வர வேண்டும். இதனால் புத்துணர்ச்சி அளித்து லேசாக உணர வைக்கும்.
மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் தோல் சீவிய இஞ்சி துண்டுகளை டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவைத்து ஐந்து நிமிடம் கழித்து இறக்கி ஆறவைத்து இந்த சாறை வடிகட்டி, மஞ்சள்தூள், தேன், எலுமிச்சை சாறு சிறிது கலந்து குடித்து வரலாம். சைனஸ் பாதிப்பு காரணமாக காது கொள்ளும் பிரச்சினை இருக்கும். இதனால் மூச்சு விடுவது கடினமாக இருப்பது போன்ற உணர்வு தோன்றும்.
இந்த நிலையில் தான் வீட்டில் இந்த மருந்தினை உபயோகப்படுத்தலாம். உடல் எடையை எப்போதும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள காலை எழுந்தவுடன் எலுமிச்சை சாறு கலந்த வெதுவெதுப்பான நீர் பருக வேண்டும். அதிக புரதம் கொண்ட காலை உணவு. பெரும்பாலும் முட்டை வெள்ளைக்கரு மற்றும் தோஸ்ட் கொண்டது சைவம் என்றால் உப்புமா அல்லது தோசையாக சாப்பிடலாம்.
நண்பகலில் ஒரு கப் தேநீர் மதிய உணவுக்கு வேகவைத்த காய்கறி, பகலில் பழம் அல்லது கொட்டைகள் ஸ்னாக்ஸ் சாப்பிடலாம். டின்னர் சூப் அல்லது சாலட் எடுத்துக்கொள்ளலாம். தினமும் மாதுளை, ஆரஞ்சு பழச்சாறு, தர்பூசணி, கேரட் எடுத்துக் கொள்வது நல்லது. வாரத்தில் மூன்று நாட்கள் இஞ்சி, புதினா டீ அருந்த வேண்டும்.
ஒரு ஸ்பூன் தேனில், 2 எலுமிச்சை பழம், சேர்த்து முதலில் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். இதை தொடர்ந்து புதிய பால் க்ரீம் பூசிக் கொள்ளவும். இதமான தண்ணீரில் 10 நிமிடம் கழித்து கழுவிக் கொள்ளுங்கள்.
தினமும் செய்து வந்தால் உதடு சிவப்பாகும். முட்டை வெள்ளை கருவை முகம் மற்றும் கழுத்தில் பூசி 20 நிமிடம் கழித்து காய வைத்து கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை செய்து வருவதால் முகத்திற்கு ஒரு ஃபேஸ் பேக் ஆக இருக்கும்.
தேங்காய் எண்ணெயுடன் காபி பொடி சிறிது உப்பு சேர்த்து கலக்கி குளிக்கும் முன்பாக தேய்த்து சிறிது நேரம் காயவிட்டு கழுவலாம். இது ஆன்ட்டிஸ் சிறப்பாக இருக்கும். டீப் கண்டிஷனர் அப்ளை செய்வதற்கு தேங்காய் எண்ணெய், தேங்காய் சாறு கலந்து தலையில் தடவி கொண்டே பிளாஸ்டிக் கவரால் மூடி கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து தலை முடியை அழுவதால் வாரம் ஒருமுறை செய்து வருவதால் அலை போன்ற கூந்தலைப் பெற முடியும்.