தங்கைகளே.. தம்பிமார்களே… முதலுதவி தெரியுங்க!
முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன பொருட்கள் தேவை என்பதை நம்மில் பலருக்கு முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை இப்போ ஒரு நல்ல சான்ஸ் தெரிஞ்சுக்குவோம்.
அதென்ன முதலுதவி என்றால் முதலில் செய்யப்படும் உதவி பலரின் வாழ்வுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும். இது குறித்து நாம் தெரிந்துகொண்டால் உதவியாக இருக்கும். விபத்து மற்ற அசாதரண சூழலில் செய்ப்படும் முறையான உதவி முதலுதி ஆகும்.
முதலுதவி பெட்டி என்பது பொது இடங்களில் இருக்க வேண்டியது சொல்ல போனால் அனைத்து பகுதிகளிலும் இருந்தால் நலம் பயக்கும். ஆனால் அது இருக்க வேண்டிய இடமே பலருக்கு தெரியாமல் போகின்றது என்பது தான் வேதனை.
வாழ்க்கையில் ஒரு தனிமனிதனுக்கு தேவையான பண்புகள் எவ்வளவு அவசியமோ அதை போன்று மனித வாழ்க்கையில ஆரோக்கியம் என்பதும் அவசியமானது ஆகும். ஆரோக்கியத்தை பாதுகாக்க இது உதவிகரமாக இருக்கும்.
அடிப்படைத் தேவையான பொருட்கள்
பேண்டேஜ் துணி ரோல்கள் சுத்தமான ஒட்டக்கூடிய பேண்டேஜ்கள் ஒட்டும் டேப்புகள் முக்கோண மற்றும் ரோலர் பேண்டேஜ்கள் பஞ்சு பேண்ட் எய்ட் பிளாஸ்டர் கத்திரிக்கோல் சிறியடார்ச் தெர்மோ மீட்டர் லேடெக்ஸ் கையுறைகள் சிறிய கிடுக்கிகள் ஊசி ஈரப்பத்தம் கொண்ட டவல்கள், சுத்தமான உலர்ந்த துணிகளின் துண்டுகள் ஆன்ட்டி செப்ட்சிக் ச்வலான் டெட்டால் பெட்ரோலியம் ஜெல்லி ட்யூப் ஊக்குகள் – பல அளவுஜளில் சுத்தப்படுத்தும் கரைஸல் அல்லது சோப் போன்ற அடிப்படைத் தேவையான பொருட்கள் இருக்க வேண்டும்.
மருந்துகள் ஆஸ்பிரின் அல்லது நிவாரணிகள் வயிற்றுப் போக்கை நிறுத்தும் வீட்டு மருத்துகள் பூச்சிக்கடி, தேனீக்கள் கொட்டுதலுக்கான முதலுதவி மருந்து ஆண்டி பயாடிக் ஆயின்மெண்ட்டுகள் லக்ஸேட்டிவ் தீப்புண்ணுக்கான களிம்பு
இது போன்ற அடிப்படை பொருட்கள் அனைத்தும் கொண்ட பெட்டியே முதலுதவி பெட்டியாகும்.
முதலுதவி என்பது அடிப்படை பாதுகாப்பு கவசம் ஆகும் மேலே குறிப்பிட்டவையைப் போல் வீட்டு மருந்து சில மூலீகைகள் நாட்டு மருந்துகள் உடனடியாக உதவுபவை ஆகும்.
உயிரைக் காக்கும்
முதலுதவி காயம்பட்டவருக்கு காப்பாக இருந்து செயல்படும். பெரிய சிக்கல்களிலிருந்து உயிரைக் காக்கும் இதனை ஒரு கலையெனவே கூறலாம். ஆனால் நிறைய பேருக்கு முதலுதவி குறித்து முழுமையான புரிதல்கள் இருப்பதில்லை.
மெத்தப் படித்தவர்களும் மென்பொருள் படித்தவர்களுக்கும் இன்னும் முழுமையான விழிப்புணர்வு என்னவென்று தெரிவதில்லை. மேலும் இது குறித்து முழுமையான புரிதல்கள் இருப்பதில்லை.
அரசு தனியார் தொலைக்காட்சிகள் மற்ற பள்ளி, கல்லுரி அமைப்புகள் பொது இடங்களில் முதலுதவி குறித்து குறும்படங்கள் மற்றும் வகுப்புகள், ஸ்டால்கள், ஓவியம் போன்ற கலைகள் மூலம் தெரிவிக்கலாம்இவ்வாறு முதலுதவி குறித்துப் பலவழிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். .