இந்த கஷ்டம் உங்களுக்கு இருக்கா..!!
நம்மில் பலபேருக்கு இந்த பிரச்சினைகள் இருக்கும். ஒரு சிலருக்கு கூட்டம் என்றாலே அலர்ஜியாக இருக்கும். அதுவும் பயணம் செய்யும் நேரத்தில் அதிகப்படியான கூட்ட நெரிசல் காரணமாக மயக்கம், குமட்டல் போன்ற பிரச்சனைகளை சந்தித்திருப்போம். இவற்றை தவிர்ப்பதற்கு என்னென்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
பயணம் செல்பவர்கள் அந்த நேரத்தில் உணவை உண்ணாமல், கிளம்புவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக உணவுகளை உண்ண வேண்டும். வயிறு நிரம்ப சாப்பிடாமல் அரை வயிறு அளவு சாப்பிட வேண்டும். சாப்பிடாமல் இருந்தாலும் இந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் குறித்த நேரத்தில் சரிவிகிதத்தில் உணவை உண்பது இந்தப் பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.
நம் உடம்பில் நீர்ச்சத்து குறைபாட்டினால் உடல் நலம் பாதிக்கும் வாய்ப்புள்ளதால் அடிக்கடி நீர் அருந்த வேண்டும். நீர் அருந்துவதால் பயணத்தின் போது சிறுநீர் கழிக்கும் பிரச்சனை வரும் என்று ஒரு சிலர் தண்ணீரை குடிக்காமல் இருப்பார்கள். இது தவறான கருத்து பயணத்திற்கு முன்னதாகவே 3 மணிநேரத்திற்குள் தேவையான அளவு நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளலாம்.
இயற்கையை ரசித்த படி, ஒரு இசையை கேட்டுக் கொண்டு
பஸ்ஸில் போகும்போது தூரத்தில் இயற்கையை ரசித்த படி, ஏதாவது ஒரு இசையை கேட்டுக் கொண்டு பயணம் செய்யலாம். இது வாமிட்டை தடுக்கும். ஒரு சிலருக்கு ஒரு சில வாசனைகள் சேராமல் இருக்கலாம். அதிகப்படியான பர்ஃப்யூம் வாசனை, டீசல், பெட்ரோல் ஸ்மல் வந்தாலோ ஒரு சிலருக்கு வயிற்றைப் பிரட்டி வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும்.
முடியாத காரணத்தால், இது போன்ற உணர்வுகள் ஏற்படும். தவிர்க்க முடியவில்லை என்பதற்கு கையில் ஒரு கவரை வைத்துக் கொள்ளலாம். வாந்தி எடுக்கும் சூழ்நிலை ஏற்படும் போது பையில் எடுத்து டிஸ்போஸ் செய்து விடலாம். இது கூட்டத்தில் அருவருப்பை ஏற்படுத்தாமல் அருகில் இருப்பவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது.
நீண்ட தூரம் பயணம்
சுகாதாரமும் சுத்தமாக இருக்கும். எலுமிச்சை பழம் கையில் வைத்துக் கொண்டு இதை அவ்வப்போது முகர்வது வாந்தி ஏற்படக்கூடிய உணர்வைத் தடுக்கும். இஞ்சி சாறு பருகலாம். இது வாந்தி எடுக்க படுவதைத் தடுக்கும். நீண்ட தூரம் பயணம் செய்து விழாக்களில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சாப்பிடுவது, உடனடியாக திரும்ப பயணம் செய்வது இந்த நேரங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பதுண்டு.
ரயில், பஸ், கார் இவற்றில் சென்றாலும் ஜன்னலோர பகுதிகளில் அமர்ந்து கொள்வது பாதுகாப்பா இருக்கும். வெளிக்காற்று சுவாசிப்பதால், காற்று முகத்தில் படுவதால் இது போன்ற உணர்வை தவித்திடும். பயணத்தின் போது அமைதியாக இருந்தால் வாமிட் தலைதூக்கும்.
எனவே உடன் வரும் நண்பர்கள், குடும்பத்தினருடன் பேசிக்கொண்டே செல்வதன் மூலமாக பிரச்சனையை முடிந்தவரை சமாளிக்கலாம். 30 நிமிடங்கள் சிறிது நேரம் தியானம் செய்து புறப்படும் போது நல்ல தீர்வாக இருக்கும். காரில் செல்லும் போது ஏசி போட்டு கொள்வதாலும் இது போன்ற உணர்வை தடுக்க முடியும்.