எப்பவுமே நீங்க அழகா ஜொலிக்கனுமா?
நாம் வெளியே சென்று வந்தால் தூசு, மாசுக்கள் படிவதால் முகம் பொழிவு குறையும். சோப்பிற்கு பதிலாக கடலை மாவு, மஞ்சள், எலுமிச்சை சாறு, தேன் கலந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து குளிர்ந்த நீரால் கழுவி வருவதால் முகம் பளபளப்பாகும்.
வரண்ட சருமம் உடையவர்கள் இதை அப்ளை செய்வதற்கு முன்பாக சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் முகத்திற்கு லைட்டாக தேய்த்து அப்ளை செய்து பிறகு இந்த பேஸ்ட்டை பேக் போட்டு காய வைத்து கழுவி வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.
தலையில் முடி கொட்டிக் கொண்டே இருந்தாலும் முடி வளர்ச்சி இல்லாமல் போனாலோ அதற்கு கறிவேப்பிலை ஒரு கப், தயிர் அரை கப் சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்து தலையில் பேக் போட்டு சிறிது நேரம் கழித்து சீயக்காய் தேய்த்து குளித்து வர முடி கருமை மாறும் கருமையாகும். அத்துடன் நன்றாக அடர்த்தியாக வளரவும் செய்யும்.
குண்டாக இருப்பவர்கள் கவரிங் செயின் போடுவதாலும், நிறைய பேருக்கு கழுத்தில் கருப்பை போக்குவதற்கு ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் கோதுமை மாவு, ஒரு ஸ்பூன் பால் இவற்றை நன்றாகக் கலக்கி கழுத்திற்கு அப்ளை செய்ய வேண்டும்.
புரதச்சத்து நிறைந்த புரோட்டின் நிறைந்த இந்த பேஸ்ட்டை கழுத்திற்கு அப்ளை செய்து காய வைத்து கழுவி வந்தால் நாளடைவில் கருமை நிறம் நீங்கி கழுத்து அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
இதை தொடர்ந்து செய்து வர வேண்டும். ஒரு வாரத்திலேயே நல்ல ரிசல்ட் கிடைக்கும். இந்தப் பேஸ்ட்டை வெயில் படும் இடங்களில் கை, கால் கழுத்து முகம் என எங்கு வேண்டுமானாலும் அப்ளை செய்து, மசாஜ் செய்து காய வைத்து கழுவி வரலாம்.