வாழ்வியலை நெறிப் படுத்தும் உலக யோகத் தினம்
உலக யோகா தினம் நாடு முழுவதும் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. யோகா உடல் மனதை நெறிப்படுத்த ஒரு கலையாகும் யோகா இந்தியாவை தலைமையகமாக கொண்டது. உலக மக்கள் அனைவராலும் பின்பற்றப்பட்டு வருகின்றது. யோகா முறையாக செய்து வந்தால் ஆரோக்கியம் இதயம் ரத்த ஓட்டம் ஆகிய அனைத்தும் சீராகும்.
யோகாவினால் உடலில் உள்ள தசைகள் ஆக்ஸிஜன் போன்றவை ஊட்டச்சத்துகள் பெறுகின்றன உடலுடைய இயல்பான செயல்பாட்டை முறைப்படுத்துவதில் யோகா முக்கிய பங்கு கொண்டது. கார்பன் டை ஆக்சைடு போன்ற கழிவுகளை அகற்ற யோகா என்பது அவசியமாகின்றது. உடலில் கொலஸ்ட்ரால் வைட்டமின் டி மற்றும் பல ஹார்மோன்களின் தொகுப்பை முறைப்படுத்த யோகாவை நமது வாழ்வியல் இணைத்துக்கொள்ளலாம். ஒருவரின் ரத்தத்தில் அதிகப்படியான கொழுப்பு தமனிகளில் உருவாகும்போது இதயத்தில் ரத்த ஓட்டம் குறையும். இது பல நோய்களுக்கு வழி படுத்தும் இதை அனைத்தையும் முறை செய்ய யோகா செய்து வருதல் சிறப்பாகும்.
யோகா செய்வது பழமையான காலங்களிலிருந்து பின்பற்றப்பட்டு வருகின்ற ஒரு முறையாகும். யோகா நமது உடலை வடிவமைக்கும் மனதை நெறிப்படுத்த உதவும் ஒரு வாழ்வியல் ஆகும். யோகா செய்வதன் மூலம் இயற்கையான உடல் கட்டுக்கோப்பை பெற முடியும் மனம் ஒருநிலை படுத்த முடியும். நோய்களை அடியோடு அகற்ற முடியும் உடலில் கொழுப்பு படிவதை தடுக்க முடியும். உடலில் வளர்சிதை மாற்றத்தை நெறிப்படுத்த முடியும்.
இன்றைய நவீன காலத்தில் யோகா செய்வது என்பது மிகவும் முக்கியமான வாழ்வியல் முறைகளில் ஒன்றாகும். இதனை நாம் கடைபிடித்து வரும் போது நமக்கு ஆரோக்கியம் மற்றும் மன அமைதி என்பது வாழ்வில் நிலைத்து நிற்கும்.
யோக முத்திரைகள் நமது உடலின் ஒவ்வொரு செல்லையும் புத்துணர்ச்சியாக இருக்க வைக்கின்றது. சக்கராசனம், சலபாசனம், சர்வாங்காசனம், போன்ற பல்வேறு ஆசனங்கள் சிறப்பு பெற்றவையாகும். பிராணயாமம் உடலைத் தூய்மைப்படுத்தும் மனதை நெறிப்படுத்தும் வாழ்வியலை இனிமையாக்கும். மன அழுத்தங்களைக் குறைக்க யோகா என்பது இன்றைய முக்கியமான முறைகளில் ஒன்றாக மக்களால் பின்பற்றப்படுகின்றன