சகல செல்வங்களைப் பெற்றுத் தரும் வைகுண்ட ஏகாதசி விரதமுறை
மார்கழி மாதத்தில் அமாவாசைக்கு பிறகு சுக்லபட்ச ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்படும். இந்த ஏகாதசி அன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கடைபிடிக்க வேண்டிய உயர்ந்த விரதமாக கருதப்படுகிறது. ஏகாதசி விரதம் மூன்று நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய மூன்று நாட்கள் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். 24 டிசம்பர் வியாழக்கிழமை தசமி தொடங்கி, வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி விரதமிருந்து சனிக்கிழமை துவாதசி அன்று பாரணை செய்ய வேண்டும்.
- ஏகாதசி விரதம் மூன்று நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது.
- தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய மூன்று நாட்கள் கடைப்பிடிக்கப் படும் விரதம் ஆகும்.
- சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கடைபிடிக்க வேண்டிய உயர்ந்த விரதம்.
விரதத்தைக் கடைப்பிடிப்போர்
இந்த விரதத்தைக் கடைப்பிடிப்போர் ஏகாதசி முந்தைய நாளான தசமி அன்று பகலில் ஒரு வேளை உணவு உண்டு. இரவு முழுவதும் பழங்களை உண்ண வேண்டும். தசமி இரவு முழுவதும் கண்விழித்து, அடுத்த நாள் ஏகாதசி அன்று அதிகாலையில் குளித்து விட்டு பூஜை செய்து பகவான் மகாவிஷ்ணுவின் மந்திரங்களை உச்சரித்து வழிபட வேண்டும். பகல் வேளையில் தூங்காமல் விழித்திருந்து விரதம் இருக்க வேண்டும்.
ஏகாதசி அன்று முழுவதும்
ஏகாதசி அன்று முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அன்றைய தினம் ஏழு முறை 7துளசி இலைகளை உண்ணலாம். மறுநாள் துவாதசி அன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக 21 வகை காய்கறிகளை சமைத்து படைத்து பாரணை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். இந்த மூன்று நாட்களும் அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு சென்று பெருமாளை வழிபடலாம்.
மாவிளக்கு நெய் தீபம்
வீட்டில் பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி, துளசி மாலை அணிவித்து மாவிளக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும். பெருமாளுக்கு படைத்த மாவிளக்கு பிரசாதமாக ஏகாதசி அன்று உண்ண வேண்டும். முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் பால், தயிர், பழங்கள் இறைவனுக்கு படைத்து விட்டு உண்ணலாம்.
துவாதசி அன்று பாரணை
துவாதசி அன்று பாரணை செய்வது சமைக்கும் உணவில் உப்பு, புளிப்பு, சுவை இல்லாத உணவாக சுண்டைக்காய், நெல்லிக்காய், அகத்திக் கீரையையும் சேர்த்து சமைக்க வேண்டும். உங்கள் வசதிக்கு ஏற்ப இறைவனுக்கு படைத்து விட்டு பாரணை செய்ய வேண்டும்.