Audioசினிமா

யாஞ்சி யாஞ்சி நாயகி போட்டோஷூட்

அனல் பறக்கும் போட்டோஷூட்.

யாஞ்சி யாஞ்சி நாயகி பச்சைப்பசேல் ஆடையில் அமர்க்களமாக போட்டோ ஷூட் தந்துள்ளார்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்திய ராணுவ அதிகாரியின் மகள். அந்த ஒரு கம்பீரமும் தைரியமும் அதோடு பெண்மை கலந்த கதாநாயகி.

மலையாளம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என தனித்தனியே ஒவ்வொரு மொழியிலும் தனித்துவமாக படங்களில் நடித்து வருகிறார். கன்னட மொழியை தாய் மொழியாக கொண்ட நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். மலையாள படத்தில் திரையுலகிற்கு அறிமுகமானவர். ஆனால் கன்னட படமான யூ டேன் மிகவும் பிரபலமானார். அவரின் நடிப்பு பேசப் பட வாய்ப்புகள் வந்து குவிந்தன.

தமிழில் இவன் தந்திரன், விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, கே13 ஆகிய படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். நேர்கொண்ட பார்வை ஒரு ரீமேக் படமாக இருந்தாலும் தன் கதாபாத்திரத்தை பர்ஃபெக்ட்டாக அசத்தியிருப்பார்.

சமயத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் தைரியத்திற்கு சவாலாக இயக்குனர் பைக் ஓட்டுவதை பற்றி கேட்க அவரும் முயற்சிக்க அது ஒரு பிரமாதமான அனுபவமாக கருதினார். தற்போது போட்டோ ஷூட்டில் பச்சைக்கலர் ஆடையில் மினுமினுப்பாக காட்சியளிக்கிறார். இணைய தளங்களில் கொரோனா விட செம வைரலாக பரவுகிறது.

என்ஜாய் மக்களே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *