யம தீபம் ஏற்றி கொண்டாடப்படும் தீபாவளி!
தீபாவளியின் சிறப்பான பலன்
யம தீபம் ஏற்றுவது தீபாவளியின் சிறப்பான பலன் தரும். நவ கிரகங்களான சூரியனுக்கு உகந்த தானியம் கோதுமையாகும் அதனை கொண்டு, யம தீபத்தினை தென்னாட்டில் அகழ்விளக்குகளாக ஏற்றுவோர்கள் உண்டு. கோதுமை மாவினை சப்பாத்தி பதத்தில் செய்து அவற்றில் விளக்கு வடிவம் செய்து எண்ணெய் ஊற்றி வழிப்பட்டால் சூரிய பகவானின் மகனான எமதர்மராஜா மனம் மகிழ்வார் என்பது ஐதீகம்.
தீபாவளி பண்டிகை சிறப்பானதாக அமைய, தீபாவளி பண்டிகைக்கு முன்பு நவம்பர் 5, 2018 இன்று தன்தேரஸ் என அழைக்கப்படும் லட்சுமி பூஜை செய்வதற்கு உகந்த நாள் ஆகும்.
எமதர்ம ராஜரை வரவேற்று ஏற்றப்படும்
இன்று மதியம் ஒரு மணிக்கு மேல் 13 விதமான பொருட்கள் வாங்க வேண்டும். மேலும் 13 பொருட்கள் வாங்க பொருளாதார வசதியில்லாதவர்கள் தங்களால் இயன்றவற்றை வாங்கி குறைந்த பட்சம் உப்பு, விளக்கு, நல்லெண்ணெய் வாங்கி பயன் பெறலாம். இம்முறையானது வட மக்களால் பிரபலமாக செய்யப்படுகின்றது. தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருந்து மாறியது
தெற்கு பகுதியிலும் விவரங்கள் அறிந்தவர்கள் பின்பற்றி வருகின்றனர். தீபாவளி தமிழ்நாட்டில் நவம்பர் 6 ஆம் நாளும், ஆந்திரா மற்றும் வட பகுதியில் நவம்பர் 7 ஆம் நாட்கள் என நவம்பர் 5 முதல் 7 வரை 3 நாட்கள் சிறப்பாக பூஜை போன்ற ஐதீகங்களுடன் கொண்டாடப்படுகின்றன.
விளக்குகள், உப்பு, வெள்ளியில் ஏதேனும் , நல்லெண்ணை, விளக்குமாறுகள், முரம் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கப்படுவது ஐதீகம் ஆகும். இன்று மதியம் 1 மணிக்கு மேல் வாங்க வேண்டும்.
மாலை திரயோதி தசி நேரத்தில் ஏற்றப்பட வேண்டும். 5.25 க்கு மேல் இரவு 8.01க்குள் யம தர்மராஜாவுக்கான விளக்குகள் ஏற்றப்பட வேண்டும். கோதுமை மாவில் விளக்குகள் ஏற்றி பச்சரிசி பரப்பி திருநீறு , சந்தனம், குங்குமம் வைத்து ஏதேனும் ஒரு பூ வைத்து விளக்கினை வீட்டிற்கு வெளியே ஏற்றி வழிப்பட வேண்டும். சப்பாத்தி மாவினால் அகலமாக விளக்கு வடிவம் செய்து நெய் நல்லது நல்லெண்ணை விட்டு விளக்கேற்ற வேண்டும். இந்நேரத்தில் 13 விளக்குகள் ஏற்றி வீடு மற்றும் வாயிலில் ஏற்ற வேண்டும். குறைந்த பட்சம் ஒரு விளக்காவது ஏற்றலாம். எமதர்ம ராஜரை வரவேற்று ஏற்றப்படும் விளக்கால் மனம் மகிழ்ந்து நமக்கான அருள் வழங்கி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற ஆசிர்வதிப்பார்.
யம விளக்கு ஏற்றுவதன் மூலம் துர் மரணம் எனப்படும் விபத்துகள், தற்கொலை போன்றவற்றால் சாந்தி அடையாத ஆத்மாக்களுக்கு சாந்தி அடைய பிராத்திக்கலாம். உலகில் உள்ள இறந்த அனைத்து ஆதமாக்களுக்காகவும் வேண்டி வைக்கப்படும் விளக்குகள் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கும். மேலும் இவ்விளக்கு வழிபாட்டால் யமதர்ம ராஜாவின் ஆசியும் அருளும் கிடைக்கப் பெறலாம். தெற்கு நோக்கி விளக்குகள் ஏற்றப்பட வேண்டும்.
யமதீபம் ஏற்றுவதன் மூலம் திருமணத்தடை விலகும், சொத்துக்கள் சேரும். தொழில் வளம் பெருகும். தேவையான வாய்ப்புகள் தேடிவரும். வருடம் முழுவதும் நன்மைகள் தேடிவரும்.
எமதர்ம ராஜா தன் தங்கையான யமுனைக்கு சீர் கொண்டு செல்லும் நேரத்தில் அவரை வரவேற்கும் விதமாக இந்த தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இன்று தன் தேரஸ் என்றும் மக்கள் கொண்டாடுவார்கள்.