ஓய்வு பெறும் அதிரடி வீரர் தி அண்டர்டேக்கர் நான் ஜெய்க்க இனி பாக்கியில்லை
எனது அண்டர்டேக்கர் ரிடையர் ஆகிட்டாரா!
80ஸ் 90ஸ் கிட்ஸின் முக்கியமான பொழுதுபோக்கு WWE. பல ஆண்களின் லட்சியத்தின் உருவாகவும் குருவாகவும் திகழ்ந்தவர் ‘தி அண்டர்டேக்கர்’.
தி அண்டர்டேக்கர் தந்த திடுக்கிடும் பேட்டி.
“எப்பொழுதும் என்றும் முடியாது என்று சொல்லக் கூடாது. ஆனால் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் அந்த மேடையை மீண்டும் எறப் போவதில்லை நான் ஜெயிக்க எதுவும் பாக்கி இல்லை. பல மாற்றங்கள் ஆட்டத்தில் வந்துள்ளது. புதிய தலைமுறை வருவதற்கான தடம் இது. வாழ்க்கையின் பல முக்கியமான பாகங்களை பார்ப்பதற்காக ரெஸ்லிங்கிலிருந்து ஓய்வு பெறுகிறேன்.”
தி அண்டர்டேக்கரை கொண்ட எடுக்கப்பட்ட அவரின் ஆவணப்படத்தில் மீண்டும் ரெஸ்லிங் செய்யப்போவதாக நடித்திருக்கும் இவர் அந்த ஆவணப்படம் மூலமாக கொண்ட அனுபவத்தை வைத்து இத்துறையில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்ததாக கூறினார்.
மார்க் வில்லியம் கால்வே என்ற இயற்பெயர் கொண்ட இவர் மல்யுத்தமான WWE வந்த பிறகு வைத்துக்கொண்ட பெயர் தி அண்டர்டேக்கர்.
1965 ஆம் ஆண்டு பிறந்த கால்வே 1986 இன் பிற்பகுதியில் பஸ் சாயரின் கீழ் பயிற்சியைத் தொடங்கினார். அதிகாரப்பூர்வமாக ரெஸ்லிங் பெடரேஷன் உடன் கையொப்பமிட்டு முன் உலகிற்கு 1990 அறிமுகமானார். இவர் 1997 முதல் தி பிரதர்ஸ் ஆஃப் டிஸ்ட்ரக்ஷனாக என்ற பெயருடன் அரை-சகோதரரான கேனுடன் ஜோடி சேர்ந்தார். 2020 தற்போது தன்னுடைய 55வது வயதில் ரெஸ்லிங்கிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
30 வருடங்களாக ரெஸ்லிங் ரசிகர்களை எண்டர்டேன் செய்த தி அண்டர்டேக்கர் ரெஸ்ட்லிங்கிலிருந்து ஓய்வு பெறுகிறார். அவருக்கு மிகுந்த மரியாதையுடன் டாட்டா பைபை சொன்ன பிறகு புதிதாக அந்த இடத்தை நிரப்பும் ஆற்றல் படைத்தவர்கள் வந்தால் ஹாய் சொல்ல ரெடியா இருங்க.