வா ரே வா அனி கமல் லோகேஷ் செம பட்டாளம்
திரையுலகத்தின் மிகவும் முக்கியமான செய்தி! உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது பிக் பாஸ் சீசன் 4ல் மிகவும் பரபரப்பாக இருக்கும் தருணத்தில் அதிரவைக்கும் அதிரடியான செய்தி.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். மூவரும் அவரவர் பணியில் சிறந்தவர்கள். இம்மூவரும் சங்கமிக்கும் போது எவ்வளவு சிறப்பாக இருக்கும்!
மாநகரம் என்னும் மாசான படத்தில் திரையுலகில் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் அளித்த பேட்டியில் தான் ஒரு உலக நாயகன் கமலஹாசனின் ரசிகன் எனக் கூறி இருக்கிறார். இவர் இயக்கிய இரண்டாவது படம் கார்த்தி நடித்த கைதி. விருமாண்டியின் ஊக்கம் தான் கைதி எனவும் கூறியுள்ளார்.
சில நாட்களாக லோகேஷ் கனகராஜ் பெரிய தகவலுடன் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன அந்த மிகப்பெரிய செய்தி இதுதான் என்று பகிரங்கமாக கூறியுள்ளனர். ‘முன்பு ஒரு காலத்தில் ஒரு பேய் வாழ்ந்தது’ என்ற வரிகளுடன் பல துப்பாக்கிகளால் சித்தரிக்கப்பட்ட முகத்துடன் கூடிய போஸ்டர் இந்த நற்செய்தியை வெளியிட்டது.
ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மாஸ்டர் இவருடைய மூன்றாவது படம். திரை உலகில் இரண்டாவது மூன்றாவது படத்திலேயே பெரிய நடிகருடன் கைகோர்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆவார். தற்போது நான்காவது படத்தில் மிகப்பெரிய நடிகருடன் கைகோர்க்கிறார் என்பது செம சூப்பரான செய்தி.
லோகேஷ் கனகராஜ் எழுத்து மற்றும் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிக்க அனிருத் இசையமைக்க ராஜ்கமல் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த போஸ்டரை மூவரும் மும்மாதிரியாக வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் ‘ஆண்டவருக்கு நன்றி’ என குறிப்பிட்டுள்ளார். ஆண்டவர் என்று குறிப்பிட்டது கமல்ஹாசனையா அல்லது இறைவனையா! என்ற கேள்வி மக்களிடையே பரவி வருகிறது.
உலகநாயகன் கமலஹாசன் ‘அடுத்த பயணம் தொடங்கியது. மறுபடியும் உங்கள் நான்.’ என்று கூறி எப்பொழுதும் போல் அவர் பாணியில் வார்த்தைகளால் ரசிகர்களை பிடித்தார்.
அனிருத் இவர்களுடன் இணைய மிகவும் உற்சாகமாக இருப்பதாகத் தெரிவித்து இரு ஹேஷ்டேக்குகளை சேர்த்துள்ளார். கமலஹாசன்232 மற்றும் எவன் என்று நினைத்தாய் இவ்விரண்டும் சொல்லாமல் எதையோ சொல்வது போல் தோன்றுகிறது. இந்தப் படம் கமல்ஹாசனுடைய 232 வது படமாக இருக்கும் மேலும் இதுதான் இந்த படத்தின் பெயரா! என்ற கேள்வியை கேட்க தோன்றுகிறது.
காத்திருப்போம் காலம் பதில் சொல்லும்.