செய்திகள்

ஐ காபி! சர்வதேச காபி தினம்

என்னடா இது ரெண்டு நாளைக்கு முன்னாடி தானடா கொண்டாடினோம்! என்று கேட்பவர்களுக்கும் 29 செப்டம்பர் மற்றும் 1 அக்டோபர் இரண்டு நாட்களுமே காபி தினங்கள் தான்.

என்ன வித்தியாசம்!

29 செப்டம்பர் தேசிய அளவில் கொண்டாடப்படும் காபி தினம். 1 அக்டோபர் சர்வதேச அளவில் கொண்டாடப்படும் காபி தினம்.

பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.

காபி

கொட்டைகள் அரைக்கப்பட்ட பொடியில் சுடசுட வெந்நீரை விட்டு பில்டரில்லிருந்து துளித்துளியாக இறங்கும் டிகாஷனை எடுத்து சூடான பாலோடு இணைந்து அழகான டவரா செட்டில் கொதிக்க கொதிக்க கமகமவென்று கொண்டு இருக்கையில் வந்து அமரும் அந்த ஒரு நொடி அலாதியான உணர்வைத் தரக்கூடியது. தமிழர்களுக்கு அது ஒரு உணவுப் பொருள் அல்ல. எமோஷன்!

மூன்று முதல் ஆறு வேளை

காலை எழுந்தவுடன் கண்விழித்தால் காபி. காலை சிற்றுண்டிக்கு பின் காபி. 11 மணியளவில் ஒரு சிறிய இடைவேளைக்காக காபி. மதிய உணவு முடித்து ஒரு சில மணி நேரங்களுக்குப் பின் தூங்காமல் இருப்பதற்காக ஒரு காபி. மாலையில் சூரியனை ரசித்துக்கொண்டே ஒரு கப் காபி. சிலர் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு காபி குடிப்பார்கள். அவர்களுக்கு காபி குடித்தால்தான் தூக்கம் வரும் என்றும் காரணம் கூறுவார்கள். இவ்வாறு காபி என்பது தினத்தின் அங்கம்.

இரு கொட்டை

அரேபிக்கா, ரொபஸ்டா என காபிக் கொட்டைகள் இரு வகைப்படுகிறது. அரேபிக்கா காப்பிக் கொட்டைகள் வீடுகளுக்குத் தேவைப்படும் காபி பொடிக்கு உபயோகப்படுத்தப்படுவதாகும். ஸ்டார்பக்ஸ், கேஃப் காபி டே போன்ற குளிர் சாதனப் பெட்டி பொருத்தப்பட்ட பெரிய பெரிய கடைகளில் விதவிதமான வெவ்வேறு பெயர்களில் ஆறிப்போன காபியையும் ருசித்துக் குடிக்கும் கும்பலுக்கு உபயோகப்படுத்துவது ரொபஸ்டா காபிக் கொட்டைகள்.

விதவிதமான காபிகள்

காபிக்கு என்றே கடையை திறக்கும் அளவிற்கு பலவிதமான காபிகள் இருக்கின்றன. 15, 18 விதங்கள் இருக்கிறது என்று பார்த்தால் மொத்தமாக 30 விதங்கள் இருக்கிறது. காபி டிகாஷன் மற்றும் பாலின் தன்மை கொண்டு இவ்வளவு விதமான காபிக்களை தயாரிக்கின்றனர்.

டிகாஷன்

காபிக் கொட்டைகள் தான் வித விதமாக இருக்கிறது என்றால் அதிலிருந்து டிகாஷன் எடுக்கப்படும் கருவிகளிலும் விதம் உண்டு. பெரும்பாலான வீடுகளில் காபி மேக்கர் என்று சொல்லப்படும் எலக்ட்ரிக்கல் டிகாஷன் கருவியும் சில வீடுகளில் சாதாரணமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் காப்பர் டிகாஷன் பில்டரை காணலாம்.

இன்ஸ்டன்ட்

சூர்யாவும் ஜோவும் சூப்பரான சன்ரைஸ் விளம்பரத்துக்கு வருவாங்க. சன்ரைஸ் ப்ரூ என பல கம்பெனிகள் கொடுக்கும் பொடியில் இன்ஸ்டன்ட்டா போடற காபிக்கும் ஒரு தனி பவுஸ் இருக்குங்க.

எது எப்படியோங்க நறுமணமிக்க சுடசுட காப்பிய காலைல பாக்கலானா அந்த நாள் விடிஞ்சா போல இருக்காது. காபி தினத்தை காப்பியோடு என்ஜாய் பண்ணுங்க. ஷியர்ஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *