நிலையான செல்வமும் பெற கிருத்திகை வழிபாடு.!
நிறைந்த அறிவும், நிலையான செல்வமும்,சிறந்த வாழ்க்கைத்துணை, அழகான அறிவான குழந்தையை பெற்றெடுக்க இவற்றை பெறுவதற்கு கிருத்திகை வழிபாடு வாழ்வில் மிகுந்த பலனைத் தரும். முருகனுக்குரிய வழிபாடுகளில் முக்கிய வழிபாடு இந்த கிருத்திகை வழிபாடு.
18.6.20 வியாழக்கிழமை காலை 9.20 am துவங்கி வெள்ளிக்கிழமை காலை 11.27 am வரை கிருத்திகை. பிரதோஷமும், கிருத்திகையும் சேர்ந்து வருகிற இந்த வழிபாட்டை நிச்சயமாக ஒவ்வொருவரும் கடைபிடிக்கலாம்.

மாதம் தோறும் தவறாமல் நாம் மேற்கொள்வதால் முருகனின் அருளைப் பெறுவதோடு நிலையான செல்வமும், நிறைந்த அறிவு, வாழ்க்கைத் துணையும், அறிவான குழந்தையும் கிடைக்கும்.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய தீப்பொறிகள் ஆறு வகையாக பிரிந்து, சரவண பொய்கையில் இருந்து கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகை பெண்களுக்காக, ஒரு வரம் அளிக்கப்பட்ட சிவபெருமான் இந்த கார்த்திகை விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு மேற்கூறிய வரங்களை அளித்தார்.
இதனாலேயே கார்த்திகை விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவ் விரதத்தை மேற்கொள்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்கு காலையிலும், மாலையிலும் சென்று வழிபட்டு வரலாம்.

கோவிலுக்கு செல்ல முடியாத காரணத்தால் வீட்டிலேயே வழிபாடு செய்யலாம். செவ்வரளி பூ மாலை சாற்றி, பச்சரிசி, வெல்லம், பருப்பு சேர்த்து சர்க்கரை பொங்கல் வைத்து நிவேதனமாக படைக்கலாம்.
தீபம்,தூபம் காட்டி முருகனுக்குரிய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்யலாம். இவ்விரதத்தை அனுஷ்டிப்பது கார்த்திகைப் பெண்களின் ஆசியையும், முருகப்பெருமானின் அருளையும் பெற்று நலமுடன் வாழலாம்.