அளவற்ற வேலை, சவால்களால் கவலை படுபவர்களா?? இதோ உங்களுக்கான பதிவு
அளவற்ற வேலை மற்றும் பொறுப்புக்கள், அங்குமிங்கும் அலைச்சல், உடல்நிலை சரியில்லை, உற்றார் உறவினர்களுடன் மனக்கசப்பு இது போன்ற சவால்களில் சிக்கித் தவிக்கிறீர்களா, உங்களுக்கு அடுத்த என்ன செய்வது என்று தெரியவில்லையா, அப்படியெனில் மனதை அமைதிப்படுத்தி எல்லா விதமான சவால்கள் வந்தாலும் அதனை சமாளிக்க நீங்கள் தினசரி 100 பேருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும். இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
நாம் என்ன பாவங்கள் செய்திருந்தாலும் அறிந்த அறியாத செய்த பாவங்கள் தவறுகள் இவை அனைத்தையும் நாம் எப்படி சரி செய்வது என்று திரும்பி வருந்தி காத்திருப்போமானால் கடவுள் நமக்கு காட்டும் முக்கிய வழி அன்னதானம் செய்வதுதான். இந்த அன்னதானம் செய்வதற்கு அவரவர் வசதி என்பது இருக்கின்றது.
நீங்கள் இருப்பவர்களானால் உங்களால் முடிந்த செலவுகள் செய்து அன்னதானம் செய்யுங்கள். என்கிட்ட காசே இல்ல ஆனா நான் எப்படி செய்வது என்று யோசிப்பவர்களா உங்களுக்கும் ஒரு எளிய வழி இருக்கின்றது. தினசரி ஒரு கைப்பிடி அளவு நாட்டுச்சக்கரை அல்லது கல்கண்டு அல்லது வரத் திராட்சை ஆகியவற்றை நீங்கள் நிலத்தில் தூவி வர அதை உண்ணவரும் எறும்புகள் உங்களை ஆசீர்வதிக்கும் இதன் மூலம் நீங்கள் உங்கள் மன நிம்மதியை பெறலாம்.
அத்துடன் உங்கள் மனதுக்குள் இருக்கும் ஒருவித மன அமைதியற்ற நிலை அழுத்தம் ஆகியவை குறையும். அத்துடன் தினசரி காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபாடு நடத்தி வருவது மிகவும் சிறப்பான ஒரு வழிகாட்டுதலை உங்களுக்கு கொடுக்கும்.
விளக்கு ஏற்றுவது என்பது மிகவும் முக்கியமானது தினசரி ஏற்றுவது என்பது கடமை மற்றும் வீட்டில் லட்சுமி கடாட்சம் அமைதி, செல்வ வளம், பெருகும் கல்வி வளம் பெறுவதற்கு இது முக்கிய காரணியாக இருக்கின்றது.
இவ்வளவு எளிதாக அன்னதானம் செய்ய முடியும் எனில் யார் வேணாலும் இதை செய்யலாம் இதற்கு எந்த தடையும் இல்லை. இது அனுபவம் மூலம் கற்ற பாடம் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்.