விளையாட்டு

நம்பர் 1 இடத்தை, கைப்பற்றிய ஆஸ்திரேலியா அணி ஆறுதல் வெற்றி பெற்றது

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் முனைப்பில் களம் கண்டன.

இதைத் தொடர்ந்து டி20 தொடரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதன் மூலம் 275 புள்ளிகள் பெற்று முதலிடத்தை கைப்பற்றியது. இங்கிலாந்து அணி 271 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச முடிவு செய்து இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர் டாம் பென்டன் 2 ரன்களுக்கு அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோ மற்றும் மாலன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். மாலன் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மொயின் 23, ஜோ டென்லி 29 ரன்களும் அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோ 44 பந்துகளில் 3 சிக்ஸர் மூன்று பவுண்டரிகள் உட்பட 55 ரன்களை குவித்தார்கள்.

இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிய 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. கட்டுக்கோப்பாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டார்க் ஹாசில் உட் ரிச்சர்ட்சன் ஆகர் தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர். ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் களம் கண்டது குறிப்பிடத்தக்கது.

தொடக்க ஆட்டக்காரர் மேத்தி வேட் 14 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். கேப்டன் ஆரோன் பின்ச் அதிரடியாக விளையாடி 39 ரன்களை சேர்த்துக்கொண்டார். மார்க் வுட், கரன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 39 ரன்கள் விளாசி ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை உறுதிசெய்த மிட்செல் மார்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் 44 மற்றும் 77 ரன்கள் குவித்த ஜோஸ் பட்லர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். காயம் காரணமாக மூன்றாவது போட்டியில் பங்கேற்க படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *