பொருளாதார பாதிப்புகள் குறித்து துல்லியமாக பேசிய சினிமா
பாரிசில் பிறந்த கதையின் நாயகி ஒரு பாடகியும் ஆன இவர் Mario Cotillard சிறுவயதில் இருந்தே கலை தொடர்பான குடும்பச் சூழலில் வளர்ந்த இவர். ஒரு சிறந்த நாடக நடிகையாக திகழ்ந்தார்.
டூ டேஸ் ஒன் நைட்
சினிமாவில் காலடி எடுத்து வைத்த பிறகு சீசர் ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகள் பல பெற்று வந்தவர். டூ டேஸ் ஒன் நைட் ஆஸ்கர் ஏமாற்றத்தை தந்தாலும் ஆஸ்திரேலியன் பிலிம் கிரிட்டிக்ஸ் விருது, பாஸ்டன் விருது, சின் ஐரோப்பிய விருது, என பல்வேறு சர்வதேச விருதுகளை இப்படம் பெற்றுள்ளது.
பிரம்மாண்டம் என்பது ஒரு படைப்பாளியின் படைப்பில் சிந்தனையில் நிஜத்தை நெருங்கி பேசும் தரத்தில் இருப்பது தானே. தவிர படத்தின் பட்ஜெட் ஒதுக்கீட்டை அல்ல என்பதற்கு டூ டேஸ் ஒன் நைட் இன்னொரு சாட்சியாக உள்ளது.
உழைக்கும் மக்களின் பிரச்சனை வளர்ந்த நாடுகளிலும் கூட இருக்கின்றன. நமது குரல் என நமக்கு உலகின் மற்றொரு பக்கத்தை அடையாளம் காட்டுகிறார்கள் luc dardenne, jean Pierre dardenne.
முதலாளிகளின் மட்டும் போதும் குற்றவாளி ஆக்காமல் நண்பர்களுடன் வேலை செய்வதற்கு வேலை செய்யும் இடத்தில் நல்ல நண்பர்கள் கிடைப்பதற்குமான மலை வித்தியாசத்தையும் போகிற போக்கில் சொல்லி விட்டுச் செல்கின்றார்கள் இவர்கள்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் மனித உழைப்பை உறிஞ்சி விட்டு எப்படி மனித நேயம் இன்றி பணியாளர்களை தூக்கி எரிகின்றன என்றும். முதலாளிகளுக்கு பணம் மட்டுமே நோக்கம் என்பது பற்றியும். எளிய நடையில் சிறிய பொருட்செலவில் பேசுகிறது. இந்த பெல்ஜியம் நாட்டு திரைப்படம்.
அதே நேரம் சூழல் உருவாகும் மோசமான பொது தன்மையினால் நிறுவனங்களும் கையறு நிலையில் தான் சில முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கிறது என்பதையும் சமரசமின்றி பதிவு செய்கிறது.
டூ டேஸ் ஒன் நைட் என்ற பெல்ஜியம் நாட்டு சினிமா. கொரோனா பாதிப்பால் உலகம் முழுக்க பலரும் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றார்கள். உலகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வெகு காலம் பிடிக்கும் என்கின்றனர் வல்லுனர்கள்.
காதலித்தோம், நகைச்சுவை வரலாறு, என சர்வதேச அளவில் பல சினிமாக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தனிமனித வாழ்வில் நிகழும் பொருளாதார பாதிப்புகள் குறித்து துல்லியமாக பேசிய சினிமாக்கள் ரொம்பவே குறைவாகத்தான் இருக்கின்றது. தந்தையைப் பறி போன போது மனிதாபிமானத்தின் பக்கம் நின்றால் சாண்ட்ரா.