ஆஹா நா ஊறும் உலக உணவு தினம்
உலக உணவு தினம்! நீ இல்லை நான் இல்லை நாமாக உலகமே கொண்டாடும் ஒரே தினமாக இருக்கக்கூடியது உலக உணவு தினம். என்ன நான் சொல்றது சரிதானே! கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் ஜாலியாக பார்ப்போமா!
- 16 அக்டோபர் சர்வதேச அளவில் உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது.
- குறிப்பாக 16 அக்டோபர் கொண்டாடக் காரணம்!
- உணவின் மதிப்பை அறிவதற்கும், உணவை வீணாவதை தடுப்பதற்கும் உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது.
- நம்ம ஊர் சிறப்பு என்னென்ன!
உலக உணவு தினம்
ஐக்கிய நாடுகளின் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பை நிறுவிய தேதியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் 16 அக்டோபர் உலக உணவு தினமாக கொண்டாடப்படுகிறது. 2020 பட்டினியை எதிர்த்துப் போராடியதற்காக உலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
ஆஹா தமிழ்நாடு
இந்தியாவின் வடக்கிலிருந்து தெற்கு வரை கிழக்கிலிருந்து மேற்கு வரை அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு தனித்துவமான உணவுகள். தமிழ்நாட்டு மக்கள் உணவிற்காக சம்பாதிக்கிறார்கள் உணவிற்காக செலவிடுகிறார்கள் என்று சொன்னால் தவறில்லை தானே!
தமிழ்நாட்டில் அறுசுவை
திருப்பதி லட்டு, திருநெல்வேலி அல்வா, ஆம்பூர் பிரியாணி, கும்பகோணம் டிகிரி காபி, காஞ்சிபுரம் இட்லி, நாஞ்சில் நாடு மீன் கறி, மதுரை கறிதோசை ஜிகர்தண்டா, காரைக்குடி செட்டிநாடு சிக்கன் பணியாரம், செங்கோட்டை பார்டர் பரோட்டா, பழனி பஞ்சாமிர்தம், ஆற்காடு மக்கன் பேடா, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, ஊட்டி வர்க்கி, ஈரோடு கொங்குநாட்டு உணவுகள், கோயம்புத்தூர் தேங்காய் பன், மணப்பாறை முறுக்கு, திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி, தூத்துக்குடி மக்ரூன்ஸ், சாத்தூர் காராசேவ், சென்னையில இது எல்லாம் கிடைச்சாலும் வடகறிக்கு தான் மவுசு ஜாஸ்தியாம்.
இப்படி எந்த ஊருக்கு போனாலும் நமக்கென்று உணவு நம்மை வரவேற்கிறது.
உணவு
- நாள் முழுவதும் படும் பாடு அரை ஜான் வயிற்றுக்காக தானே!
- சிலர் ருசித்து உண்பர் மேலும் சிலர் மற்றதை ரசித்துக்கொண்டே உண்பார். என்னங்க புரியலையா சாப்பாட்டை ரசித்துச் சாப்பிடுவது ஒரு வகை மற்றதை பார்த்துட்டு சாப்பாட சாப்பிடணும் என்று சாப்பிடுவது ஒரு வகை.
- வயிற்றுக்காக சாப்பிடும் கும்பலுக்கு மத்தியில் நாவிற்காக சாப்பிடும் கும்பலும் இருக்கின்றன.
- அனாவசியமான உணவை சாப்பிட்டுவிட்டு மருந்தை சாப்பிடுவதை விட ஆரோக்கியமான உணவை மருந்தாக சாப்பிடவது நன்று.
நிறைவாக சாப்பிட்டு மன நிறைவுடன் வாழ்வோம்.