செய்திகள்தேசியம்

20 வயது மாணவரின் அதிவேக அசத்தல் சாதனை

ஹைதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவரின் அதிவேக சாதனை நீலககந்த பானு பிரகாஷ் உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் என்ற பட்டத்தை வென்றுள்ளார். இவர் டெல்லி பல்கலைக்கழகம் ஸ்டீபன் கல்லூரியில் கணிதப் பாடத்தை தேர்வு செய்து படித்து வருகிறார்.

அண்மையில் லண்டனில் கால்குலேஷன் வேர்ல்டு சம்பியன்ஷிப் அட் மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட் என்பதின் கீழ் அறிவு சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்று கொண்ட ஹைதராபாத்தை சேர்ந்த நீலகண்ட பானு பிரகாஷ் என்னும் 20 வயது மாணவர் உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் என்ற பட்டத்திற்கான தங்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்ற எம்எஸ்எம் என்றழைக்கப்படும் போட்டியில் பங்கேற்று உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் என்ற பட்டத்தை வென்று இந்தியா சார்பில் தங்கப்பதக்கத்தை வென்று உள்ளதாக குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் கூறும் போது உலக அளவில் நான்கு விருதுகளையும், 50 லிம்கா விருதுகளையும் வென்று உள்ளதாக குறிப்பிட்டார். தனது மூளை கால்குலேட்டரை விட வேகமாக இயங்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த சாதனைகளுக்கு கணித மேதைகள் ஆன ஸ்காட் பிளான் ஸ்பர்க் மற்றும் சகுந்தலா தேவி ஆகியோரே முக்கிய காரணம் என்று கூறினார். தேசத்திற்கு பெருமை தரும் விஷயமாக உள்ளன.

இது உலகளவில் இந்தியாவை நிலை நிறுத்த என்னால் முடிந்த மட்டும் முயற்சி செய்தேன் என்று தெரிவித்தார். இதனால் தான் இந்த பட்டத்தை பெற முடிந்தது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *