செய்திகள்தேசியம்

ஊரடங்கு தளர்த்துவது குறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுவது

தொற்றுநோய் மறைந்து விட்டதாக எந்த நாடும் கூறிவிட முடியாது. இந்த வைரஸ் எளிதில் பரவுகிறது. இந்த நேரத்தில் கட்டுபாடுகளை தளர்வு படுத்துவது பேரழிவுக்கான வழியை திறப்பது போன்றது.

வழிபாட்டுத் தலங்கள், இரவு விடுதிகள், அரங்கங்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் சேருவதால் வைரஸ் அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளதாக டெட்ராஸ் கூறியுள்ளார்.

குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதையும், மக்கள் பணிகளுக்கு திரும்புவதையும், அதே நேரத்தில் பாதுகாப்பாக இருப்பதையும், தாங்கள் காண விரும்புவதாகவும் பேசினார்.

பொருளாதாரம் மற்றும் சமூக நிலையை சரி செய்யும் முயற்சிக்கு உலக சுகாதார அமைப்பு முழு ஒத்துழைப்பு தருவதாக அவர் ஒரு செய்தி மாநாட்டில் கூறியுள்ளார். கட்டுப்பாடுகளால் பலர் சோர்வடைந்து வருவதாகவும், 8 மாதங்களுக்குள் இயல்பு நிலைக்கு திரும்ப விரும்புவதாகவும் கூறுகின்றார்.

வைரசை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு முன்பு ஊரடங்கு தளர்வு படுத்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் அதிகமாக பரவக்கூடிய நாடுகளில் பெருங்கூட்டம் சேரக்கூடிய நிகழ்வுகளை தடுக்க வேண்டும். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்தாமல் ஊரடங்கை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *