பக்தி இல்லா ஞானம் குப்பை
அறிவியல் உச்சத்தில் நாம்
அறிவியலின் உச்சபட்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் காலம் இது. பல அரிய சாதனை கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் கொண்டு வெற்றி நடை போட்டு, நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் உயர்ந்தவர்கள் என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் கால கட்டமும் இதுவே.
அறிவை சேகரிக்காத மனிதர்களை நாயின் வாலை போல் பார்க்கும் மனிதர்கள் ஏராளம்.
அதென்னங்க இன்பர்மேஸன் எரா
மனித பிறப்பு தோன்றிய நாள் முதல், நாம் வாழும் காலகட்டத்தையே ‘தி இன்பர்மேஸன் எரா'(The information era) என்று கூறுகிறார்கள். அதாவது அதிகப்படியான செய்திகள் இந்த காலகட்டத்திலேயே பகிரப்பட்டு பெரும்பாலான மக்களால் அறிந்து கொள்ளப்படுகிறது என்பது அதன் அர்த்தம்.
முதல் மூன்று இடம் பிடித்த நாடுகள்
இப்படிப்பட்ட அறிவின் சேகரிப்பை கொண்ட மனிதர்களால் உலக வாழ்க்கையில் போராட இயலும் என்பதில் ஆச்சரியம் இல்லை. அறிவின் உச்சபட்டச்சத்தை கொண்ட மனிதர்கள் பட்டியலில் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ள நாடுகள் சீனா,அமெரிக்கா,இங்கிலாந்து ஆகும்.
இவர்களின் கண்டுபிடிப்புகளையே உலகில் உள்ள பிற நாடுகள் பின்பற்றும் என்பதில் ஆச்சரியம் இல்லை. ஞானத்தில் பெயர் போனவர்களும் இவர்களே.
என்ன பயன்?
ஆயுதம் ஒன்றே ஆனால் அந்த ஆயுதத்தை மருத்துவர் அதை கையாள்வதற்கும் கொலைகாரன் அதை கையாள்வதற்கும் மிகுந்த வித்தியாசம் இருக்கிறது அல்லவா?
அதே போன்றுதான் பகுத்தறிவு கொண்ட மனிதர்களிடம் ஞானம் பிறப்பதென்பது கொலைகாரனின் கையில் கத்தியை கொடுப்பதற்கு சமம்.
பக்தியின் எல்லையே அன்பு. அப்படிப்பட்ட தூய அன்பில்லாத பகுத்தறிவாளர்களிடம் ஞானம் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? அது குப்பைக்கு சமம்.
பக்தி இருக்கும் ஒரு தூய உள்ளம் கொண்ட மனிதன் பிற நாட்டவர்களுக்கு நோயை பரப்ப எப்படி மனம் வரும் ? அப்படிப்பட்ட மனிதர்களை கொண்ட நாடுகளாலே இன்று மனித குலம் அல்லலில் இருக்கின்றது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
“அறிவினான் ஆகுவது உண்டோ
பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை”
-குறள் 315
மற்ற உயிரின் துன்பத்தைத் தன் துன்பம்போல் கருதிக் காப்பாற்றாவிட்டால், பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ?