சுவை மாறிய ஒயின் தயாரிப்பாளர்கள் கவலைக்கிடம்
கடந்த மாதத்தில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட அதிவேக காட்டுத் தீயால் உயிர் சேதங்கள் ஏற்பட்டன. இதை அணைக்க தீயணைப்பு துறையும் போராடி வந்தன. இதனால் தற்போது ஒயின் தயாரிப்பாளர்கள் நஷ்டம் ஏற்பட்டதாக கவலை தெரிவித்துள்ளனர்.
கலிபோர்னியா மாகாணத்தில் தரமான திராட்சைப் பழங்கள் பிரபலம். இந்த திராட்சைகளை கொண்டு அங்கு விலை உயர்ந்த ஒயின் தயாரிக்கப்படுகிறது. இப்போது காட்டு தீயால் அந்த பானங்களில் சுவையே மாறிவிட்டன.
புகையின் மணம் அதில் பரவி இருப்பதாக ஒயின் தயாரிப்பாளர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். “வழக்கமாக பல வகைகளில் ஒயின் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும். தற்போது இந்த முறை ஏற்பட்டுள்ள நஷ்டம் சீர் செய்ய முடியாத அளவிற்கு பாதிப்பை உருவாக்கியுள்ளன” என்கிறார் சிராக் கூஸ் பல்கலைக்கழக பேராசிரியர் புராக் காசாஸ்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயால் மக்களும், காட்டுயிர்களும் பாதிக்கப்பட்டதுடன் இந்த பகுதியில் தயாரிக்கப்படும் ஒயின் பானத்தின் சுவையை மாறியுள்ளன. பெரும் காட்டுத்தீயால் உருவான புகை பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.