சினிமாசின்னத்திரை

பிபி ஜோடிகள் தொடருமா!

விஜய் தொலைக்காட்சி வெவ்வேறு தொடர்களுடன் மக்களை என்டர்டேன் பண்ணுவதில் எந்த குறையும் வைக்காமல் சின்னதிரை பயணத்தை தொடர்கிறது. இப்பொழுது அதில் ஒரு தொடர் தொடருமா என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

பிபி ஜோடிகள்

சனி ஞாயிறு கிழமைகளில் பல போட்டி நிகழ்ச்சிகளை விஜய் தொலைக்காட்சி அரங்கேற்றுகிறது. ஸ்டார்ட் மியூசிக் போட்டி நிகழ்ச்சி சென்ற மாதம் முடிவடைந்த நிலையில் அந்த நேரத்தில் ஒளிபரப்ப புதிதாக ஒரு போட்டித் தொடரை முடிவு செய்த விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் ஜோடிகள் என்கிற பிபி ஜோடிகளை அரங்கேற்றியது.

நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் இத்தொடரின் நீதிபதிகளாகவும் மகேஷ் மற்றும் தீனா போட்டியின் தொகுத்தும் நடத்துகின்றனர். நான்கு சீசன்களாக நடந்த பிக் பாஸின் போட்டியாளர்களே பிபி ஜோடிகளின் போட்டியாளர்கள்.

https://www.instagram.com/tv/COSRuSHFHIG/?igshid=1wd471xqc6z2y

ஏப்ரல் இறுதியில் இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் நடந்து இருக்க நடிகர் நகுல் தன் சமூக வலைத்தள பக்கத்தில் இரண்டு முகக் கவசங்கள் போடுவதற்கான பயனை விழிப்புணர்வாக கொடுக்க அவரின் ரசிகர் ஒருவர் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நீங்கள் ஏன் முக கவசம் அணிய வில்லை என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அங்கு அனைத்தும் சானிடைஸ் செய்யப்பட்டு அனைவரும் பரிசோதிக்கப்பட்டு தகுந்த கட்டுப்பாடுடனே ஷூட்டிங் நடக்கிறது என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும் படிக்க : பிக் பாஸ் 4 (Bigg Boss 4 Tamil) மீண்டும் நம் முன்னே..

பேபி கேபி

மே 2ஆம் தேதி ஒளிபரப்பப்பட்ட பிபி ஜோடிகள் நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக சித்தரிக்கப்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து மே 5-ஆம் தேதி பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களுக்கு நடுவே குழந்தையாக இருந்து 5 லட்சம் வென்ற கேபிரியல்லாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

https://www.instagram.com/p/COhceJMjW3S/?igshid=y9usvi79063b

பேபி கேபி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தெரிவித்ததோடு #spreadlovenotcorona என்பதை குறிப்பிட்டிருந்தார்.

ஆஜீத்

சூப்பர் சிங்கரில் ஷப்பி குட்டியாக அறிமுகமானவர் ஆஜித். இவரும் பிக் பாஸ் சீசன் 4-யில் போட்டியாளராக இருந்தவர். பேபி கேபிக்கு கொரோனா தொற்று உறுதியான பிறகு ஆஜித்திற்கும் கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது. எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக ஆஜீத் தெரிவித்துள்ளார். பிபி ஜோடிகளில் கேபிக்கு ஜோடியாக ஆடியவர் ஆஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : உலகநாயகன் கமல் தன் மகளின் பிறந்தநாளன்று என்ன செய்கிறார் தெரியுமா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *