அன்பும் உறவும்வாழ்க்கை முறைவாழ்வியல்

எதற்கு இல்லறம்?

காதல்


அனைவருக்கும் ஒரு துணை வேண்டும். தன் அன்பை பொழிய மற்றும் எதிர்பாலினத்தவரும் அன்பை கேட்காமலே தனக்கும் தம்மை சுற்றி உள்ள உறவினர்களுக்கும் அள்ளி கொடுக்க வேண்டும், அன்பு மழையில் பொழிய வேண்டும், அன்பு சண்டைகள் நிகழ வேண்டும், நம்பிக்கையை இழக்கும் தருணத்தில்,’நான் இருக்கிறேன் உமக்காக’ என்று நம்மை தலை நிமிர்த்த வைக்க வேண்டும். மனிதனின் இயல்பான எதிர்பார்ப்புகளில் இவையும் ஒன்று. இதற்காகவே திருமணம் வேண்டும், அதற்காக பல வருடங்கள் காத்திருக்கவும் தயார் என்று ஒரு கூட்டம் காத்திருக்கிறது.
இப்படி காதலை மட்டும் காட்டினால் இல்லறம் நிறைவடைந்து விடுமா???

காமம்


மேற்கண்டவாறு ஒரு தரப்பினர் கூறினால், வேறு சில மனிதர்களின் இயல்பு எவ்வாறு இருக்கிறது என்று பார்த்தால்,
மனிதர்களின் காம தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியே திருமணம். அதற்காகவே நான் இல்லறத்தை நாட விரும்புகிறேன் என்று கூறுகிறார்கள். இங்கு காமம் என்று குறிப்பிடப்படுவது “இச்சை”. அதாவது உடல் தேவை மட்டும் இச்சை என்று கூற முடியாது. மனம் சில பொருட்களை கண்டு, இது இருந்தால் நான் நிம்மதியாக இருப்பேன் என்று கட்டுக்கடங்காமல் போவதும் இச்சைதான். ஆகவே அந்த காமம் ஆனது எதிர்பாலினத்தவரின் உடலை மட்டும் சாராமல் உயிரற்ற பொருட்கள் மீதும், புகழின் மீதும் இருக்கலாம். இப்படிப்பட்ட ஆசைகளை தனி மனிதனால் அனுபவிக்க இயலாத ஒன்று. எனவே இந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒரு துணை தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட காமத்தை அனுபவித்து, ஆசைகள் கடந்துவிட்டால் இல்லறம் நிறைவடைந்து விடுமா???

கடவுள்


மேற்கூறியவாறு ஒரு சார மக்கள் காதல் வேண்டும் என்கின்றர், மற்றொரு சார மக்கள் காமம் வேண்டும் என்கின்றர். இதிலிருந்து முற்றிலும் வேறேபட்ட பிரிவினர், காதல் ஏமாற்றத்தையே கொடுக்கும், காமத்திற்கு எல்லையே இல்லை. இவை இரண்டும் மனிதனை மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கும் கொடுமையான செயலில் ஆழ்த்தும். ஆகவே இவை இரண்டையும் விட்டுவிட்டு பிறவித்தலையை அறுக்கும் கடவுளை நோக்கி நம் பக்தியை செலுத்துவதே மனித குளத்தின் கடமை. இப்படிப்பட்ட பக்தியை ஒரு நல்ல இல்லறத்தில் இருந்து மட்டுமே வளர்த்துக்கொள்ள முடியும் என்று கூறுகின்றர். அப்படியென்றால் கடவுளை அடையும் பாதையில் பயணித்தால் இல்லறம் நிறைவடைந்து விடுமா?

எது சரி?


இரயில் ஓடும் பாதையை சற்று கவனித்து பார்த்தால், அதில் இரண்டு தனி தண்டவாளங்கள் இருக்கும். அந்த இரண்டு தண்டவாளத்தையும் இணைக்கும் பொறுப்பை, ஸ்லீப்பர்(sleeper) என்று சொல்லக்கூடிய மரக்கட்டைகள் ஏற்றுக்கொள்ளும்.
இந்த மூன்று பாகங்களில் ஏதேனும் ஒன்று இல்லையென்றால் இரயில் என்ற இல்லற வாழ்க்கையை நிறைவு செய்ய முடியாது.
இதில் ஒரு தண்டவாளம் காதலையும், மற்றொரு தண்டவாளம் காமத்தையும் குறிக்கும். காதலையும், காமத்தையும் இணைக்கும் பணியை கடவுள் என்னும் அந்த ஸ்லீப்பர் ஏற்றுக்கொள்ளும். காதலையும் காமத்தையும் முறையான வழியில் அனுபவித்து விடுபட கட்டாயம் கடவுளின் பிணைப்பு தேவை. எனவே ஒன்றோடு ஒன்று பிண்ணிப் பிணைந்து இருப்பதை புரிந்து கொண்டு, ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

முடிவு


மனித குளத்தால் இல்லறத்தை ஒதுக்கிவிட முடியாது. அப்படி ஒதுக்கினால், மனிதகுளம் வந்த நோக்கத்தை விட்டுவிடடு வேறு ஏதோ எல்லையை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கும். வாழும்போதும் ஆனந்தமாக வாழ வேண்டும், மனித பிறப்பின் நோக்கத்தை முழுமையாக பூர்த்தி செய்யவும் வேண்டும் என்றால், இல்லற வாழ்வில் இருந்து காதல், காமம், கடவுள் என்ற மூன்றையும் அனுபவித்து கடக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *