வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களில் ஏன் இந்த ஹோமத்தை செய்ய வேண்டும் தெரியுமா?
ஆண்டுக்கு ஒரு முறை கணபதி ஹோமம் செய்வதால் குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற குடும்ப பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. வீட்டில் உள்ள தீய சக்திகள் என்று அழைக்கப்படும் எதிர்மறை சக்திகள் நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்ற, பாசிட்டிவ் எனர்ஜி அதிகமாக்க செய்யும்.
மேலும் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களையும், மேன்மை உண்டாக்கவும் செய்கிறது. குடும்பத்தில் உள்ள பண கஷ்டங்களிலிருந்து விடுபட்டு தன சேர்க்கையும், முன்னேற்றத்தையும் கொடுக்கிறது. எதிர்பாராத விதமாக ஏற்படுகின்ற துர்மரணங்கள், விபத்துக்களில் இருந்து பாதுகாக்கிறது.
இறை வழியில் செல்பவர்களுக்கு ஏற்படும் தடைகளையும், பிரச்சனைகளையும் நீக்கி அவர்களின் பாதையை எளிமையாக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்த முன்னேற்றம் அடைவார்கள். படிப்பது மனதில் நிற்கும். ஐந்து பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னியை கொண்டு கணபதி ஹோமம் செய்யும் போது அக்னியில் இருந்து வெளியாகும் அதிர்வுகள் உடலில் உள்ள சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.
மேலும் திருமணத்தடை, வேலையின்மை, தொழில் நஷ்டம் நீங்கி செல்வ செழிப்பும், வெற்றியும் வந்து சேருகிறது. வீடு அல்லது தொழில் துவங்கும் முன் குடும்பத்தில் உள்ளவர்களின் நோய்கள், தொழில் தடங்கல், மனக்குழப்பம், எதிர்மறை எண்ணங்கள் விலகி நன்மை உண்டாகும்.
உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற தடைகளை நீக்கவும். மற்ற ஹோமங்களை துவக்குவதற்கு முன்பு கணபதி ஹோமம் செய்ய வேண்டியது அவசியமாகும்.