மத்திய சுகாதாரத்துறை எல்லா நாடுகளும் நீண்ட கால போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும்
உணவு பழக்கங்களையும், சமூக இடைவெளிகளையும் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். இவற்றினால் ஓரளவிற்கு நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்.
மோசமான நிலை இனி தான் வரப்போவதாக கூறியுள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குனர். தற்போதைய சூழலில் இன்னும் மோசமான நிலை வரும் என்று அஞ்ச வைப்பதாக கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
வைரஸ் எப்படி உருவானது என்பதை கண்டறிய சீனாவுக்கு அடுத்த வாரத்தில் ஒரு குழுவை அனுப்ப போவதாகவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
கொரோனாவோடு வாழ பழகுவதை தவிர வேறு வழியில்லை என சில வாரங்களுக்கு முன்பு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்த நிலையில், பேசுபொருள் ஆன நிலையில் உலக சுகாதார அமைப்பும் தற்போது இதையே தெரிவித்தது.
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமெடுத்து உள்ளதாக கூறிய டெட்ராஸ், எல்லா நாடுகளும் நீண்ட கால போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.
அடுத்து வரும் மாதங்களில் வைரஸ் உடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ள டெட்ராஸ். இந்தத் தொற்று இப்போதைக்கு முடியப் போவதில்லை என்பது தான் அதிர்ச்சியான உண்மை என்றும் இப்போதைக்கு முடிவதாக இல்லை என்றும் தனது கவலையை தெரிவித்தார்.
வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட ஆறு மாதங்கள் தாண்டி விட்ட நிலையில் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் ஆறு மாதத்திற்கு முன்பு வரை நமது உலகமும், வாழ்க்கையும் ஒரு புதிய வைரஸால் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விடும் என்பதை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டோம் என தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பெரும் தொற்றினால் மோசமான நிலை இனிதான் வரப்போகிறது என்று உலக சுகாதார அமைப்பு இவ்வாறு எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. பயத்துடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் வேறு வழி இல்லை என்றும் தெரிவித்துள்ளது.