விளையாட்டு

இன்று ஆஸ்திரேலியா இங்கிலாந்து பலப்பரீட்சை. டி20 முதலிடம் யாருக்கு?

சர்வதேச டி20 தரவரிசை பட்டியலில் 5736 புள்ளிகளுடன் 273 ரேட்டிங் பெற்று இங்கிலாந்து அணி முதலிடத்திலும், இதேபோல் 5724 புள்ளிகளுடன் 273 ரேட்டிங் பெற்று ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக 266 ரேட்டிங் உடன் இந்தியா மூன்றாவது இடத்திலும், 261 ரேட்டிங் உடன் பாகிஸ்தான் நான்காவது இடத்திலும் இருக்கின்றன.

இன்று நடைபெறும் போட்டியில் வெல்லும் அணி சர்வதேச டி20 தரவரிசையில் முதலிடம் பிடிக்க உள்ளன. இன்று நடைபெற உள்ள இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள இங்கிலாந்து முனைப்புடன் களமிறங்குகிறது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளும் ஆதலால் இப்போட்டி ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளது.

மேலும் சவுதம்டானில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இன்று இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியானது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளன.

டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. 3 போட்டிகள் டி20 தொடரை 2.0 பூஜ்யம் என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்று விட்டன. இருப்பினும் இன்று நடைபெற உள்ள மூன்றாவது டி20 போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன. சர்வதேச டி20 தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பது யார்? என்ற பலப்பரீட்சையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் களம் இறங்க உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *