உளவியல்

மனிதனின் மனதை இயக்குவது எது?


மனமே மனிதன்

மனமே அனைத்திற்கும் காரணம் அதை சரி செய்துவிட்டால் அனைத்தும் சரியாகிவிடும் என்ற கண்ணோட்டம் இருந்தாலும், அந்த மனதை இயக்க வைப்பது எது? அந்த மனதின் பதிவுகளுக்கு காரணமானவைகள் எவை? என்ற கேள்விகள் நமக்குள் எழுவது இயல பே. ஆனால் அந்த ஆராய்ச்சிகளுக்கு தக்க காரணங்களை கண்டுபிட்டிக்கும் அளவிற்கு போதுமான நேரம் கிட்டுவதில்லை

சமுதாயம்

மனிதனை வழிநடத்துவது அவனின் மனப் பதிவுகள் என்றாலும், அந்த பதிவுகளை கொடுப்பது அவனின் சமுதாயமே. உதாரணமாக ஜாதி வெறி பிடித்த சமுதாயத்தில் பிறந்த ஒருவனுக்கு இயல்பாகவே தன் இணத்தின் மீது ஒரு ஈர்ப்பு, பற்று ஏற்பட்டுவிடுகிறது. அதேபோல் தெய்வீக வழிபாடு, பூஜை முறைகளில் ஈடுபடும் சமுதாயத்தில் வளரும் ஒரு குழந்தை இயல்பாகவே ஆன்மீக ஒழுக்கங்களோடு வளர்கிறது. ஆகவே ஒரு மனிதனின் மனதை நிர்ணயிப்பதில் அவரவரின் சூழலில் இருக்கும் சமுதாயம் 70 சதவீத பங்களிப்பை கொடுக்கிறது என்பதில் ஐயப்பாடில்லை

சமுதாயத்தை நிர்ணயிப்பது எது?

இப்படி மனதை நிர்ணயிப்பது சமுதாயம் என்றாலும், அந்த சமுதாய கோட்பாடு மற்றும் பழக்கவழக்கங்களை நிர்ணயிப்பது எது? என்ற கேள்விகள் நம்மிடையே பரவலாக இருப்பதை காண இயலும். இதற்கான முக்கிய பங்களிப்பை அந்தந்த சமுதாய சுற்றுப்புறங்களில் நிகழும் நன்மை நிகழ்வுகளும் தீமை நன்மை அல்லாத நிகழ்வுகளும் ஏற்றுக் கொள்கிறது. இதை வட்டார மொழியில் நல்லது கெட்டது என்று குறிப்பிடலாம்.

அது என்னது நல்லது கெட்டது?

அவரவரின் சுற்றப்புறங்களில் நடக்கும் விழாக்கள் மற்றும் துக்க நிகழ்வுகளே அந்தந்த சமுதாயத்தின் கோட்பாடுகளை விதிக்கிறது. அந்த கோட்பாடுகளின் கட்டளைகளுக்கு ஏற்பவே அந்த சுற்றுப்புறத்தில் உள்ள மக்களின் மனம் வடிவமாக உருவெத்து இயங்கத் துவங்குகிறது.

அது எப்படி சாத்தியம்?

நம் உறவினர்களின் ஏதோ ஒரு திருமணத்திற்கு சென்றிருப்போம். அந்த திருமணத்தில் உள்ள மக்கள் நம்மை உபசரிக்கும் வகையை வைத்துத்தான் நம் மனம் இயங்க ஆரம்பிக்கும். உதாரணமாக ஏதோ ஒரு தொழிலதிபர் அந்த திருமணத்திற்கு வந்திருப்பார். அவரை அங்குள்ள மக்கள் வியப்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் உபசரித்து இருப்பார்கள். இதை பார்த்து நாம் என்ன முடிவு செய்வோம்? நாமும் இதே அந்தஸ்த்தை பெற வேண்டும், இப்படி இருந்தால்தான் மக்கள் நம்மையும் வியந்து பார்ப்பார்கள் என்று நம்பிவிட்டு, அதற்கேற்ற இலக்குகளை முடிவு செய்ய ஆரம்பிப்போம்.

கெட்டதிலும் பங்குண்டு

இதுமட்டுமல்ல துக்க நிகழ்வுகள் நடந்த வீடுகளில், பகைகள் காரணமாக அந்த சடலத்தின் உறவினர்கள் வராமல் போயிருப்பர். அங்கு நடக்கும் உரையாடல்களை நாம் உள்வாங்கி, பிற மனிதர்களிடம் எப்படி நாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்து விடுவோம்.

ஆகவே மனிதனின் மனதை முடிவு செய்வது சமுதாய கோட்பாடுகளாக இருந்தாலும், அந்த சமுதாய கோட்பாடுகளை நிர்ணயிப்பது அந்தந்த சமுதாயத்தில் நடக்கும் விழாக்கள் மட்டும் துக்க நிகழ்வுகளே என்பதை புரிந்து கொண்டு சமுதாயத்திடம் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம் கடமை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *