மாத்திரை சாப்பிடுவதால் உடல் எடை கூடுமா.!
மாத்திரை மற்றும் கேப்ஸ்யூல் கொண்ட பிளாஸ்டிக் வகை மாத்திரைகளை சாப்பிடும் போது இவை எடை அதிகரிப்பை ஏற்படுத்தி விடும். இந்தப் பட்டியலில் ஆண்டிஸ்கோடிக் மருந்துகள் இருமுனை கோளாறுகள் போன்ற கோளாறுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. ஒற்றைத் தலைவலி, வலிப்புகள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளும் இதில் அடங்கியுள்ளன.
உடல் எடையை அதிகரிக்க கூடியவை
உங்கள் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மற்றும் பக்க விளைவுகளை குறைக்கும் மருந்தை கண்டுபிடித்து உங்கள் மருத்துவருடன் இணைந்து ஆலோசித்து பிறகு தான் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தத்திற்கு கூட மாத்திரைகள் இருக்கிறது. இந்த மாத்திரைகள் உடல் எடையை அதிகரிக்க கூடியவை.
பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஒரு சில மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது டாக்டரிடம் கேட்டு பக்க விளைவுகள் வருமா என்று சிகிச்சை செய்யும் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். நீங்களாகவே உங்க மருந்துகளை நிறுத்துவது, மாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. மனச் சோர்வு மாத்திரைகள் கூட உங்கள் பசியை அதிகரித்து எடை அதிகரிப்புக்கு உள்ளாக்கி விடும் வாய்ப்புள்ளது.
தூக்கத்திற்கும், உடல் எடைக்கும்
தேவையில்லாத மன அழுத்தம் உங்கள் உடல் எடையை குறைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும். கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன் அதிகரிப்பால் மன அழுத்தம் உண்டாகிறது. மன அழுத்தத்தால் அதிக கலோரி கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள ஆசைப்படுவீர்கள். இந்த எண்ணம் உங்கள் எடை அதிகரிப்புக்கு கூட்டிச் செல்லும். நம்முடைய தூக்கத்திற்கும், உடல் எடைக்கும் நிறையவே சம்பந்தம் உள்ளது.
கொஞ்சம் யோசித்து பாருங்க. நீங்க இரவு நேர உணவை தாமதமாக எடுத்துக் கொள்கிறீர்களா? அதிக கலோரிகளை எடுத்துக் கொண்ட பிறகு, உடனே தூங்கச் செல்வது எந்த மாதிரியான பிரச்சனைகளை உண்டாக்குகிறது, என்பதை பற்றியெல்லாம் சிறிது யோசித்துப் பாருங்கள். சாப்பிட்ட உடனே தூங்குவது உடலில் ஹார்மோன் மாற்றங்களை உண்டாக்கக் கூடும். இதனால் பசி அதிகரிக்கும். பசியால் அதிகமாக சாப்பிட ஆரம்பிப்பீர்கள்.
இதனால் மறைமுகமாக உங்கள் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதால் எல்லோரும் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் இதுதான் உடல் எடை அதிகரிக்கிறது. என்று தெரியாமலேயே எடையை குறைக்க முற்படுவது சாத்தியமான ஒன்றாக இருக்காது. ஒருவர் ஏகப்பட்ட டயட் பின்பற்றுவார்கள். உடற்பயிற்சி செய்வார்கள். ஜிம்மிற்கு போவார்கள். இப்படி எல்லாம் செய்தும் அவர்கள் உடல் எடை குறையவே குறையாது.
சரியான காரணத்தை கண்டறிந்து
எடை அதிகரித்துக் கொண்டே போவதற்கு எதனால் ஏற்படுகிறது என்ற காரணம் தெரியாமல் குழம்பிப் போய் இருப்பவர்களும் உண்டு. உண்மையில் நம்முடைய உடல் எடை அதிகரிக்க அதிகப்படியான உணவுப் பழக்கம். உடற்பயிற்சியின்மை மட்டும் காரணம் அல்ல. வேறு சில காரணங்களும் இருக்கத்தான் செய்கிறது. கொஞ்சம் ஆழமாக ஆராய்வதன் மூலம் இதற்கான சரியான காரணத்தை கண்டறிந்து களைய முடியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
தைராய்டு மருந்துகள், எடை அதிகரிப்புக்கு காரணமான மருந்துகள், பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள், ஹைப்போ தைராய்டிசம், பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம், புகைப்பிடிப்பது இதெல்லாம் உடல் எடை ஏறுவதற்கான காரணங்களாகும். உடல் எடை அதிகம் ஆகிறது என்பதால், உங்களை மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். நீங்கள் எடை பெற விரும்பினால் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.