விழாமல் இருக்க விழிப்புணர்வுடன் இருங்க.!!
ஆண்கள் பெண்களுக்கு தரவேண்டிய பாதுகாப்பை பற்றி போன பதிவில் தெரிஞ்சுகிட்டோம். இப்ப தெருக்களில் போகும் போது நம்மளை எப்படி பாதுகாத்து, விழிப்புணர்வுடன் இருக்கணும் வாங்க பார்க்கலாம். எப்பயுமே நாம ரோட்டில நடக்கும் போது விழிப்புணர்வுடனும், என்ன நடக்கிறது என்பதை கவனித்து தைரியத்துடன், வேகமாக நடந்து செல்ல வேண்டும்.
கவனத்தை சிதறடிக்க கூடும்
நடந்து செல்லும்போது காதில் ஹெட் போன் மாற்றிக்கொண்டு, பாட்டு கேட்டுக் கொண்டும் நடந்து செல்லாதீர்கள். இது நம் கவனத்தை சிதறடிக்கப்படும். மேலும் இதைத் தவிர்ப்பதால் கவனம் பிறர்மீது ஈர்க்கப்படும். இதனால் நம்மை சுற்றி என்ன நடக்கிறது? என்பதை நம்மால் தெரிந்து கொள்ளவும் முடியும். நீங்கள் பதற்றத்துடன் இல்லாமல் கட்டுப்பாட்டுடன் இருந்து நம்பிக்கையோடு நடந்து செல்லவேண்டும்.
வண்டியை ஒரு இடத்தில் நிறுத்தும் போதும் அருகில் இருப்பவர்களை கவனிக்க வேண்டும். இரவாக இருந்தால் வெளிச்சமான பகுதிகளில் வண்டியை போய் நிறுத்தும் முதல் வண்டியை வந்து திரும்ப எடுக்கும் வரை உங்களை சுற்றி உள்ள நபர்களை உற்று கவனிக்க வேண்டும். சாலையில் செல்லும் போது அப்பகுதியை கடந்து செல்லும் வாகனங்களின் மேலும் கவனம் செலுத்த வேண்டும். இதில் எல்லாம் கவனமாக செயல்படுங்கள்.
உங்கள் கவனத்தை வேறு எதுவும் ஆக்கிரமித்து விடக்கூடாது. உங்களுடைய எண்ணத்தில் கவனமாக நம்பிக்கையுடன் இருக்கவும். நீங்கள் அச்சுறுத்த படுவதாக உணர்ந்தாள், நீங்கள் இருக்கும் இடத்தில் உள்ள நபர்களின் உதவியை நாடுங்கள். உதவி எனக் கூறி மற்றவர்களுடைய கவனத்தை உங்கள் பக்கம் ஈர்த்து, அவர்களின் உதவியை நாடுங்கள் அல்லது விசில் சத்தம் எழுப்பிக் கூட அவர்களுடைய உதவியை பெற முடியும்.
குற்றம் சம்பவங்கள் நிகழக்கூடிய இடங்கள், காலியிடங்கள், காலியாக உள்ள வாகன நிறுத்துமிடம், கட்டிடங்கள், ஆள் நடமாட்டம் இல்லாத பூங்கா இந்த மாதிரியான இடங்களுக்கு தனியாக செல்லாதீர்கள். அணிந்திருக்கும் நகைகளை வெளியில் தெரிந்த படியோ, கையில் இருக்கும் பணத்தை ஆட்டிக்கொண்டும் நடந்து செல்லக் கூடாது.
நினைவில் வைக்க
நீங்கள் கொண்டு செல்லும் கைப் பையை பத்திரமாக அதன் திறக்கக் கூடிய பகுதியை உள் புறமாக பிடித்து செல்லவும். வீட்டு சாவிகளை உள் பையில் வைக்கவும். யாராவது உங்கள் பையை திருடிச் செல்ல முற்பட்டாள் பையை விட்டுவிடுங்கள். அதைப் பிடிக்கப் போய் கடைசியில் உங்களுக்கு காயமாக வாய்ப்புள்ளது. உங்கள் உடைமைகளை விட, உங்களைப் பாதுகாத்துக் கொள்வது முக்கியம். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் போனில் பாட்டு கேட்டுக் கொண்டே போனாலோ அல்லது பிறரிடம் போனில் பேசிக்கொண்டே போனாலோ, வண்டியின் சப்தத்தை கவனிக்காமல் விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால் உங்களை யாராவது பாலோ பண்ணாலும், அது உங்களுக்கு தெரியாமல் போகக்கூடும்.
பாதுகாப்பு விழிப்புணர்வு
எப்பவும் வெளிச்சமான பகுதிகளில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் செல்லுங்கள். யாரும் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தனியாக செல்லாதீர்கள். ஏற்றி செல்லுமாறு முன்பின் தெரியாத எவரிடமும் உதவி கேட்டு கைகளை நீட்டாதீர்கள். பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்புகளுக்கு சென்று தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற வகுப்புகள் எங்கு நடத்தப்படுகிறது. என்பதை உள்ளூர் காவல் துறையினர் அல்லது உங்கள் அலுவலக சகாக்களிடம் கேட்டு அத்தகைய வகுப்புகளுக்குச் செல்லுங்கள்.