மனிதம் எங்கே??? இங்கே!!!!!! என்று வைரலாகும் ஒரு வீடியோ
மனிதம் எங்கே??? இங்கே!!!!!! என்று வைரலாகும் ஒரு வீடியோ….
பார்வையற்ற ஒரு முதியவருக்காக பெண் ஒருவர் ஓடிவந்து தொலைவில் இருந்த பேருந்தை நிறுத்தி அதில் அவரை ஏற்றி அனுப்பி வைத்த வீடியோ தான் இப்பொழுது வைரலாகி கொண்டிருக்கிறது.
அந்த வீடியோவில் இருக்கும் பெண்ணின் பெயர் சுப்ரியா டெக்ஸ்டைல் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சுப்ரியா பணி முடிந்து வீடு திரும்பும் போது அவ்வழியே வந்த பார்வைக் குறைபாடு உள்ள ஒரு பெரியவருக்கு உதவிய ஒரு வீடியோ தான் தற்போது வைரல்.
வழக்கம் போல் பணியை முடித்து விட்டு மாலை வீடு திரும்பும் போது வழியில் அந்த பெரியவரை கண்டபோது அவருடன் பேசிக்கொண்டு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது அந்த பெரியவர் தான் மஞ்சாடி செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். பார்வை குறைபாடு உள்ளதால் அவருக்குத் தான் செல்ல வேண்டிய பேருந்து தன்னை கடந்து செல்வது அறியவில்லை.
இதனை கண்ட சுப்ரியா ஓடி வந்து அந்த பேருந்தை நிறுத்தி திரும்பி சென்று அந்தப் பெரியவரை அழைத்து வந்து பேருந்தில் ஏற்றி வைத்து வழி அனுப்பி உள்ளார்.
அந்த வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது. இதனை ஒருவர் எதேர்ச்சையாக வீடியோ எடுத்து தன் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் சுப்ரியாவின் உதவியை பாராட்டியுள்ளனர். வீடியோ வைரல் ஆன பிறகு இதனைப் பற்றி அறிந்த சுப்ரியா வீடியோ எடுத்தவருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும் சுப்ரியாவின் இந்த உதவும் குணம் அவரது தந்தை வழியாக வந்திருக்கலாம் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் இந்தக் ஊரடங்கு காலத்தில் தெருவில் உள்ள பல நாய்களுக்காக உணவு அளித்துள்ளார். அவரது தந்தை அந்த வீடியோ கூட சிறிது நாட்களுக்கு முன்னர் வைரலானது குறிப்பிடத்தக்கது.
written by Srimathi