பிரம்மாண்டமான அயோத்தி ராமர் கோவிலின் தரிசனத்திற்காக காத்திருக்கிறீர்களா
ஆகஸ்ட் மாதம் அயோத்தியில் கட்டப்பட உள்ள பிரம்மாண்டமான ராமர் கோவிலுக்கு பூமி பூஜைகள் நடைபெற்று முடிந்தன. பூமி பூஜை நடக்கும் போது அயோத்தியில் எல்லா இடங்களிலும் தீபாவளி போன்ற மனநிலை காணப்பட்டன. பூமி பூஜை பார்ப்பதற்காக மக்கள் ஆவலுடன் காத்திருந்தது. அயோத்தி முழுவதும் ஒளிர்ந்தது.
பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல விஐபிகள் விழாவில் கலந்து கொண்டனர். இந்த பூமி பூஜைக்கு பிறகு ராமர் கோயில் உருவாக இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்பது பலரின் கேள்வியாக உள்ளது. 120 ஏக்கர் பரப்பளவில் உலகிலேயே மூன்றாவது பெரிய கோவிலாக அயோத்தி ராமர் கோவில் உருவாகுகின்றன.
கோவிலை கட்டி முடிக்க ரூபாய் 300 கோடி செலவாகும் என்றும் கூடுதலாக 20 ஏக்கர் பரப்பளவில் தேவையான வசதிகளை உருவாக்க ஆயிரம் கோடி வரை செலவாகும் என்றும் தெரியவந்துள்ளது. கோவில் எப்போது கட்டி முடிக்கப்படும் என்பதை ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த அறக்கட்டளையினர் அறங்காவலர் சுவாமி பரமானந்த் மஹராஜ் செய்தி நிறுவனத்தில் கூறியதாவது.
அயோத்தியில் உள்ள கர்சேவக் புரத்தில் உள்ள பட்டறையில் தயாரிக்கப்பட்ட கற்கள் ராம் கோயில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும். செங்கற்கள் தவிர அயோத்தியின் கர்சேவக் புரத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கற்கள் கோவில் கட்டபயன் படுத்தப்படும். ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்பதற்காக நாடு முழுக்க கடந்த 30 வருடங்களாக அனுப்பப்பட்ட செங்கல்கள் இவை. செங்கற்கள் பல்வேறு மொழிகளில் மலையாளம், கன்னடம், தமிழ் உள்ளிட்ட ஸ்ரீராம் என்று பெயர் செதுக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அனுப்பப்பட்ட அந்த செங்கல்கள் பயபக்தியுடன் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. செங்கற்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்படும். கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும். 2023 ஆம் ஆண்டு ராமநவமி போது கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து பக்தர்களின் வழிபாட்டு கோவில் திறக்கப்படும் என்று எதிர் பார்க்கிறோம். குழந்தை ராமர் உருவச்சிலையை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.