TNPSC GROUP 4 தேர்வு எப்போது..? காலி பணியிடங்கள் எத்தனை..?
ஜூலை 24ஆம் தேதி Group4 தேர்வு நடத்தபடும் என்றும், நாளை முதல் ஏப்ரல் 28 வரை தொகுதி- 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்; 7,381 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும்;
நாளை முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும்; 200 கேள்விகள் கேட்கப்படும் எனவும்,தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும்,
விளக்கமளித்துள்ளர். விளையாட்டு துறைக்கு 81 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தாண்டு நடைபெறும், TNPSC தேர்வுகளில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை என்றும், முறைகேடைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்; இந்தமுறை குரூப் 4 தேர்வுக்கு 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.