கோதுமை மாவு பிஸ்கட்
வீட்டில் குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக அதிரடியாக செய்வதற்கு கோதுமை மாவை கொண்டு சிம்பிள் ஆக பிஸ்கட் செய்யலாம்.
கோதுமை பிஸ்கட்
தேவையான பொருட்கள் : கோதுமை மாவு கால் கிலோ, சர்க்கரை 100 கிராம், சோடா உப்பு கால் ஸ்பூன், பேக்கிங் பவுடர் அரை ஸ்பூன், ஏலக்காய் பவுடர் ஒரு ஸ்பூன், நெய் 2 ஸ்பூன், உப்பு சிறிதளவு. எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை : ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் பொடி செய்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு இதனுடன் கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர், சோடா உப்பு, நெய், ஏலக்காய் பவுட,ர் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும்.
சர்க்கரையுடன் சேர்த்து நன்றாக கலக்கி பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிணைந்து வைக்கவும்/ மாவை சப்பாத்தி மாவு போல் அரை இன்ச் தடிமனுக்கு தேய்த்து சிறிது சிறிதாக துண்டாக பிஸ்கட் ஷேப்பில் வெட்டி தனித்தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய விட்டு பிஸ்கட் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து போட்டு பொரித்து எடுக்க வேண்டும் பொன்னிறமாக வந்ததும் நன்றாக பொரித்தெடுத்து மிதமான சூட்டில் பொரித்து எடுப்பதால், பிஸ்கட் உள்ளே நன்றாக வெந்து விடும்.
கோதுமை பிஸ்கட் ரெடி. இதை ஆறவிட்டு காற்று புகாத படி டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம்.